Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | சரத்தை திருத்துதல் மற்றும் நீக்குதல்

பைத்தான் - சரத்தை திருத்துதல் மற்றும் நீக்குதல் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

   Posted On :  22.08.2022 07:45 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

சரத்தை திருத்துதல் மற்றும் நீக்குதல்

சரத்தை திருத்த விரும்பினால் புதிய சர மதிப்பானது ஏற்கனவே உள்ள சர மாறிக்கு ஒதுக்கப்படும்.

சரத்தை திருத்துதல் மற்றும் நீக்குதல்

நாம் ஏற்கனவே கற்றது போல் பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. சரத்தை திருத்த விரும்பினால் புதிய சர மதிப்பானது ஏற்கனவே உள்ள சர மாறிக்கு ஒதுக்கப்படும்.

எடுத்துக்காட்டு

>>> strl="How are you"

>>> str1[0] ="A"

Traceback (most recent call last):

File "<pyshell#1>", line 1, in <module>

str1[0]="A"

TypeError: 'str' object does not support item assignment

மேற்கண்ட எடுத்துக்காட்டு நிரலில் strl என்ற சரமாறிக்கு “How are you” என்ற சரமானது முதல் கூற்றின் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூற்றில், சரத்தின் முதல் குறியுருவை A என்ற குறியுருவை கொண்டு மாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் பைத்தான் இம்மாற்றத்தை அனுமதிக்காது. எனவே, TYPE ERROR என்ற பிழை செய்தியை காட்டும்.

இச்சிக்கலை தீர்க்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சரமாறிக்கு புதிய சர மதிப்பினை வரையறுக்க முடியும். பைத்தான் ஏற்கனவே உள்ள சரத்திற்கு பதிலாக புதிய சரத்தினை மாற்றிவிடும்.

எடுத்துக்காட்டு

>>> strl="How are you"

>>> print (str1)

How are you

>>> strl="How about you"

>>> print (str1)

How about you     

பொதுவாக, பைத்தான் தனது சரங்களின் மீது எந்த வித மாற்றத்தையும் செய்ய அனுதிக்காது. ஆனால், replace() என்ற செயற்கூறு மூலம் ஏற்கனவே உள்ள சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு உள்ள இடங்களில் எல்லாம் வேறு ஒரு குறியுருவை மாற்றிட முடியும்.

replace() செயற்கூறுக்கான தொடரியல்

replace("chari”, "char2”)

replace() செயற்கூறு char1 குறியுரு வரும் இடங்களில் எல்லாம் char 2 குறியுருவைக் கொண்டு மாற்றிவிடும்.


எடுத்துக்காட்டு

>>> strl="How are you"

>>> print (strl)

How are you

>>> print (str1.replace("o", "e"))

Hew are yeu

சரத்தை திருத்துவது போல், பைத்தான் சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del- கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.


எடுத்துக்காட்டு 1: கீழ்க்காணும் குறிமுறை சரத்தில் உள்ள குறிப்பிட்ட குறியுருவை நீக்குகிறது.

>>> strl="How are you"

>>> del str1[2]

Traceback (most recent call last):

File "<pyshell#7>", line 1, in <module>

del str1[2]

TypeError: 'str'object doesn't support item deletion


எடுத்துக்காட்டு 2: கீழ்க்காணும் குறிமுறை ஒரு சரமாறியை நீக்குகிறது:

>>> strl="How about you"

>>> print (strl)

How about you

>>> del str1

>>> print (str1)

Traceback (most recent call last):

File "<pyshell#14>", line 1, in <module>

print (str1)

NameError: name 'strl' is not defined

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : Modifying and Deleting Strings Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : சரத்தை திருத்துதல் மற்றும் நீக்குதல் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்