பைத்தான் - சரம் உருவாக்குதல் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

   Posted On :  22.08.2022 07:45 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

சரம் உருவாக்குதல்

ஒற்றை மேற்கோள் குறிகளானது மற்றுமொரு ஒற்றை மேற்கோள் குறிகளை கொண்ட குறியுருவை கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நிரல் பெயர்ப்பியானது சரத்தின் தொடக்கம் மற்றும் முடிவை அறிய இயலாது.

சரம் உருவாக்குதல்

நாம் முன்பே கற்றது போல பைத்தானில் சரமானது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள்ளோ அல்லது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள்ளோ அல்லது மூன்று மேற்கோள் குறிகளையோ கொண்டு உருவாக்கப்படும். ஒற்றை மேற்கோள் குறிகளானது மற்றுமொரு ஒற்றை மேற்கோள் குறிகளை கொண்ட குறியுருவை கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நிரல் பெயர்ப்பியானது சரத்தின் தொடக்கம் மற்றும் முடிவை அறிய இயலாது. இந்த சிக்கலை தீர்க்க இரட்டை மேற்கோள் குறிகளை பயன்படுத்தலாம். சரமானது இரட்டை மேற்கோள் குறிகளையும் உறுப்பாக பெற்றிருந்தால் அது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும். மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும் சரமானது பல வரிசரங்களை உருவாக்க அனுமதிக்கும்.

எடுத்துக்காட்டு

#ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள சரம்

>>> print (Greater Chennai Corporation')

Greater Chennai Corporation

#ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள், ஒற்றை மேற்கோள் குறியுடன் வரையறுக்கப்பட்ட சரம்.

>>> print ('Greater Chennai Corporation's student')

SyntaxError: invalid syntax

#இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் வரையறுக்கப்பட்ட சரம்

>>>print (“Computer Science”)

Computer Science

#மூன்று மேற்கோள் குறிகளுக்குள், இரட்டை மேற்கோள் குறியுடன் வரையறுக்கப்பட்ட சரம்

>>> print (" "Computer Science" ''')

"Computer Science"

#மூன்று மேற்கோள் குறிகளுக்குள், ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறியுடன் வரையறுக்கப்பட்ட பலவரி சரம்.

>>> print ('"' "Strings are immutable in 'Python',

which means you can't make any changes once you declared" ''')

"Strings are immutable in 'Python',

which means you can't make any changes once you declared"

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : Creating Strings Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : சரம் உருவாக்குதல் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்