உலோகக் கலவைகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
உலோகங்கள் அல்லது உலோகங்களும்,
அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக்கலவை ஆகும்.
உலோகக் கலவையின் பண்புகள், அதன் உள் அடங்கிய
உலோகத்தின் பண்புகளிலிருந்து மாறுபடும். தூய தங்கம் மிக மென்மையான உலோகம். அதோடு
சிறிதளவு காப்பரைச் சேர்க்கும் போது, வலிமையும், பயன்பாடும் அதிகரிக்கின்றது.
இரசக்கலவை என்பது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த
கலவையாகும். எலக்ட்ரான்களுக்கும், நேர்மின்சுமை கொண்ட உலோக
அயனிகளுக்கும் இடைப்பட்ட நிலைமின் கவர்ச்சி விசையால், விளையும்
உலோகப் பிணைப்பின் மூலம் இக்கலவைகள் உருவாகின்றன. எ.கா சில்வர் டின் ரசக்கலவை. இது
பற்குழிகள் அடைக்கப்பயன்படுகிறது.
உலோகக்கலவை உருவாக்குவதற்க்கான
காரணங்கள்
• நிறம் மற்றும் வடிவங்களை
மாற்றியமைக்க
• வேதிப்பண்புகளை மாற்றியமைக்க
• உருகுநிலையைக் குறைக்க
• கடின தன்மை மற்றும் இழுவிசையை
அதிகரிக்க
• மின்தடையை அதிகரிக்க
அ. உலோகங்களை
உருக்கிச் சேர்த்தல்
எ.கா ஜிங்க் மற்றும் காப்பரை
உருக்கிச் சேர்த்தல் மூலம் பித்தளை உருவாகிறது.
ஆ. நன்கு
பகுக்கப்பட்ட உலோகங்களை அழுத்தி சேர்த்தல்
எகா மர உலோகம் இது காரீயம், வெள்ளீயம், பிஸ்மத், மற்றும் காட்மியம் தூள் போன்றவற்றை உருக்கிச்
சேர்த்த கலவையாகும்.
திடக்கரைசல்களான உலோகக்கலவை: உலோகக் கலவையை திடக்கரைசல் என்று கூறலாம். இதில், செறிவு நிறைந்துள்ள
உலோகம் கரைப்பான் ஆகும். மற்ற உலோகங்கள் கரைபொருள் எனப்படும்.
எ.கா பித்தளை என்ற உலோகக் கரைசலில்
ஜிங்க் என்பது கரைபொருள்: காப்பர் என்பது கரைப்பான் ஆகும்.
இரும்பின் பங்கைப் பொறுத்து உலோகக்
கலவையை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஃபெரஸ்
உலோகக்கலவை:
இதில் இரும்பு முக்கியப் பங்களிக்கிறது. எ.கா : துருப்பிடிக்காத இரும்பு, நிக்கல் இரும்பு
கலவை.
பெரஸ் இல்லா
உலோகக் கலவை:
இதில் இரும்பின் முக்கிய பங்களிப்பு இல்லை. எகா அலுமினியக் கலவை, காப்பர் கலவை.
காப்பர் கலவை
(இரும்பு அற்றது), அலுமினியக் கலவை (இரும்பு அற்றது), இரும்புக்
கலவைகள்