இயற்பண்புகள், வேதியியல் பண்புகள் - உலோகத்தின் பண்புகள் | 10th Science : Chapter 8 : Periodic Classification of Elements
உலோகத்தின்
பண்புகள்
இயற்பண்புகள்
1. இயல்பு நிலை: எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில்
திட நிலையில் உள்ளவை (மெர்குரி மற்றும் காலியம் தவிர)
2. பளபளப்புத் தன்மை: உலோகங்கள் அதிக பளபளப்பானவை
3. கடின தன்மை: அனேக உலோகங்கள், கடின தன்மையையும்
வலிமையையும் பெற்றவை (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை
கத்தியால் வெட்ட இயலும் மென்மை பெற்றவை)
4. உருகுநிலை மற்றும்
கொதிநிலை:
வழக்கமாக, உலோகங்கள் அதி
உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கும். அதிக வெப்பநிலையில், அவை ஆவியாகும். (காலியம், மெர்குரி, சோடியம், பொட்டாசியம் தவிர)
5. அடர்த்தி: உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை.
(சோடியம் மற்றும் பொட்டாசியம் தவிர இவை தண்ணீர் விட அடர்த்தி குறைந்தவை)
6. கம்பியாக நீளும்
தன்மை:
உலோகங்கள் கம்பியாக நீளும் தன்மையன. அவற்றை உடைக்காமல், கம்பியாக நீட்ட
முடியும்.
7. தகடாகும் தன்மை: உலோகங்கள் தகடாகும் தன்மை பெற்றவை.
அதாவது, அவற்றை எந்த
பிளவும் படாமல், அடித்தடித்து தகடாக மாற்ற முடியும்.
8. வெப்பம் மற்றும்
மின்கடத்தும் தன்மை: உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன எகா
வெள்ளி, தாமிரம் (டங்கஸ்டன் தவிர)
9. கரையும் தன்மை: வழக்கமாக உலோகங்கள் திரவ
கரைப்பான்களில் கரைவதில்லை.
வேதியியல் பண்புகள்
இணைதிற
எலக்ட்ரான்கள்:
உலோக அணுக்கள் பொதுவாக 1,2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிகூட்டில் பெற்றுள்ளன.
அயனி உருவாதல்
பண்பு:
உலோகங்கள் எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை. அதனால்
அவை நேர்மின் சுமை பெறும்.
அயனி மின்சுமை
இழத்தல்:
உலோகங்களின் சேர்மங்கள் மின்னற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள்
எதிர்மின்வாய் வந்தடையும்.
அணுக்கட்டு எண்: உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில்,
ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.
ஆக்சைடுகளின்
தன்மை:
உலோக ஆக்சைடுகள் பொதுவாக காரத்தன்மை உடையன.