பாம்பன் பாலம்
இராமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும், இந்தியாவின் பெரும்
நிலப்பரப்பையும் இணைக்கும் ரயில் பாலமே பாம்பன் பாலமாகும். 1914 ல் இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல் பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.
2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பந்த்ராவலி என்ற கடற்பாலம்
நீளமானது. இப்பாம்பன் பாலத்தில் ஏற்படும் உலோக அரிமானமானது, குறிப்பிட்ட
கால இடைவெளியில் கம்பிகளுக்கு அடிக்கப்படும் உலோக அரிமானத்தைத் தடுக்கும் சிறப்பு
வண்ணப் பூச்சுகள் மூலம் தடுக்கப்படுகிறது, மேலும் இது நம்
வரலாற்றில் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப் படுகிறது.