தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 8 : Periodic Classification of Elements
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை........
அ) 6,16
ஆ) 7,17
இ) 8,18
ஈ) 7,18
2. நவீன ஆவர்த்தன விதியின்
அடிப்படை..............
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஐசோடோப்பின் நிறை
ஈ) நியுட்ரானின் எண்ணிக்கை
3. ஹேலஜன் குடும்பம் எந்த
தொகுதியைச் சேர்ந்தது?
அ) 17வது
ஆ) 15வது
இ) 18வது
ஈ) 16வது
4. .................என்பது
ஆவர்த்தன பண்பு.
அ) அணு ஆரம்
ஆ) அயனி ஆரம்
இ) எலக்ட்ரான் நாட்டம்
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
5. துருவின் வாய்ப்பாடு
.............
அ) FeO. xH2O
ஆ) FeO4. xH2O
இ) Fe2O3.
xH2O
ஈ) FeO
6. அலுமினோ வெப்ப வினையில்,
அலுமினியத்தின் பங்கு
அ) ஆக்ஸிஜனேற்றி
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி
இ) ஹைட்ரஜனேற்றி
ஈ) சல்பர் ஏற்றி
7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை,
பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு.......... எனப்படும்.
அ) வர்ணம் பூசுதல்
ஆ) நாகமுலாமிடல்
இ) மின்முலாம் பூசுதல்
ஈ) மெல்லியதாக்கல்
8. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில்,
எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது?
அ) He
ஆ) Ne
இ) Ar
ஈ) Kr
9. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம்
பூஜ்ஜியம் ஆக காரணம்...............
அ) நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ) குறைந்த உருவளவு
ஈ) அதிக அடர்த்தி
10. இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும்
முக்கியமான உலோகம்............
அ) Ag
ஆ) Hg
இ) Mg
ஈ) Al
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு மூலக்கூறில் இரு
பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு அயணிப் பிணைப்பு ஆகும்.
2. நவீன ஆவர்த்தன அட்டவணையின்
அடிப்படை அணு எண் ஆகும்.
3. தனிம வரிசை அட்டவணையில் மிக
நீள் தொடர் 6 மற்றும் 7 ஆகும்.
4. CI2 மூலக்கூறில்
உள்ள 'Cl' அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A° எனில் 'Cl’ அணுவின் ஆரம் 0.99 A°
5. A-, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது A+
6. நவீன ஆவர்த்தன அட்டவணையை
உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் ஹென்றி மோஸ்லே
7. அயனி ஆரம், தொடரில் குறைகின்றது (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
8. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.
9. அலுமினியத்தின் முக்கிய தாது
பாக்சைட் ஆகும்.
10. துருவின் வேதிப்பெயர் நீரேறிய ஃபெரிக்
ஆக்சைடு ஆகும்.
III. சரியா தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.
1. மோஸ்லேவின் தனிம வரிசை
அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது.
விடை: தவறு
மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது.
2. இடப்புறத்திலிருந்து
வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது, தொடரில்
அதிகரிக்கும்.
விடை: தவறு
இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது தொடரில் குறையும்.
3. எல்லா தாதுக்களும் கனிமங்களே,
ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
விடை: சரி
4. அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், வெள்ளியைப்
போன்ற நிறமே.
விடை: தவறு
அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள்
உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் மின்கடத்தும் திறன் அதிகம்.
5. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.
விடை: தவறு
உலோகக் கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.
IV. பொருத்துக:
1. முலாம் பூசுதல் - மந்த வாயுக்கள்
2. காற்றில்லா வறுத்தல் -
துத்தநாகம் பூச்சு
3. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை
- சில்வர் - டின் ரசக்கலவை
4, பற்குழி அடைத்தல் - அலுமினோ வெப்ப ஒடுக்க வினை
5. 18 ஆம் தொகுதி தனிமங்கள்
- காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு
விடை:
1. முலாம் பூசுதல் - துத்தநாகம்
பூச்சு
2. காற்றில்லா வறுத்தல் - காற்றிலா
சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு
3. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை - அலுமினோ
வெப்ப ஒடுக்க வினை
4, பற்குழி அடைத்தல் - சில்வர்
- டின் ரசக்கலவை
5. 18 ஆம் தொகுதி தனிமங்கள் - மந்த
வாயுக்கள்
V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து
காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன பின்வருனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு
செய்க
அ) கூற்றும், காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை
விவரிக்கவில்லை.
1. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு
அயனிப்பிணைப்பு
காரணம்: ‘H' க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
விடை: அ)
கூற்றும், காரணமும்
சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
2. கூற்று: மெக்னீசியத்தை
இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும்
தன்மைமிக்கது.
விடை: இ) கூற்று
தவறு, காரணம் சரி
3. கூற்று: சுத்தப்படுத்தப்படாத,
தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
விடை: ஈ)
கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம்
கூற்றை விவரிக்கவில்லை.
VI. குறு வினாக்கள்:
1. A என்பது செம்பழுப்பு உலோகம்.
இது 'O2’ உடன் வினையுற்று <1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை
உருவாக்கும் >1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C
என்னவென்று வினைகளுடன் விளக்குக.
A என்பது தாமிரம் (Cu)
B என்பது குப்ரிக் ஆக்சைடு (CuO)
(கருப்பு நிறம்)
C என்பது குப்ரஸ் ஆக்சைடு (Cu2O)
(சிவப்பு நிறம்)
2. A என்பது வெள்ளியின் வெண்மை
கொண்ட உலோகம், A ஆனது 'O2' உடன்
800°C யில் வினைபுரிந்து B யை
உருவாக்கும்.
A யின் உலோகக் கலவை விமானத்தின்
பாகங்கள் செய்யப் பயன்படும்.
A மற்றும் B என்ன?
4Al + 3O2 → 2Al2O3 (அலுமினியம் ஆக்சைடு)
A என்பது அலுமினியம் (AI)
B என்பது அலுமினியம் ஆக்சைடு (AI2O3)
3. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ஆகும்.
இதன் வாய்ப்பாடு Fe2O3,
xH2O. இரும்பின் புறப்பரப்பில் ஈரக்காற்றுடன்
வினைபுரிந்து செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவது. இச்சேர்மம்
துரு எனப்படும்.
4Fe + 3O2 + x H2O → 2Fe2O3.xH2O (துரு)
4. இரும்பு துருபிடித்தலுக்கான
இரு காரணங்களை தருக.
• வளிமண்டலத்தில் உள்ள ஈரக் காற்று
• வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம்
• இரும்பும், வளிமண்டல ஈரப்பதமும் நேரடித் தொடர்பு
VII. நெடு வினாக்கள் :
1. பாச்கைட் தாதுவை
தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தைச் சேர்ப்பதன் காரணம்
என்ன?
பாக்சைட் தாதுவினை நன்கு தூளாக்கி சலவை
சோடாவுடன் 150°C வெப்பநிலையில்
குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைபடுத்தும் போது சோடியம் மெட்டா அலுமினேட்
உருவாகிறது. இந்த சோடியம் மெட்டா அலுமினேட் உருவாக்கத்திற்கு சோடியம் ஹைட்ராக்சைடு
சேர்க்கப்படுகிறது.
2. அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன?
அதற்கான காரணம் என்ன?
அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன்
சேர்க்கப்படுவது ஃப்ளூர்ஸ்பார்.
இது மின் பகுளியின் உருக்கு வெப்பநிலையை
குறைக்க பயன்படுகிறது.
3. ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A
ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A
அடர் H2SO4 உடன்
வினைபுரிந்து C மற்றும் D ஐ
உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?
தாமிரம் CO2 மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து பச்சை
நிற சல்பர் கார்பனேட் படலத்தை உருவாக்குகிறது.
2Cu + O2 + CO2 + H2O → CuCO3.Cu(OH)2 (தாமிர கார்பனேட்)
மேலும் காற்றில்லா சூழ்நிலையில் H2SO4 உடன்
வினைபுரிவதில்லை. ஆனால் காற்றின் முன்னிலையில் H2SO4ல் கரைகிறது.
Cu + 2 H2SO4 → CuSO4 + SO2 ↑ + 2H2O
எனவே
A என்பது தாமிரம் (Cu)
B என்பது தாமிரக் கார்பனேட் CuCO3.
Cu(OH)2
C என்பது தாமிர சல்பேட் CuSO4
D என்பத கந்தக ஆக்சைடு SO2
VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)
1. A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது.
செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை
உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன்
சேர்ந்து C ஐ உருவாக்கும், எனில் A,B,C
எவை எவை என வினைகளுடன் எழுதுக.
செஞ்சூடேறிய அலுமினியம் நீராவியுடன்
வினைபுரிந்து அலுமினியம் ஆக்சைடையும் ஹைட்ரஜனையும் உருவாக்குகிறது.
2Al (அலுமினியம்) + 3H2O (நீராவி) → Al2O3 (அலுமினியம் ஆக்சைடு) + 3H2 ↑
அலுமினியம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து அலுமினேட்டுகளை
உருவாக்குகிறது
2Al (அலுமினியம்) + 2NaOH + 2H2O → 2NaAlO2 (சோடியம் மெட்டா அலுமினேட்) + 3H2 ↑
A - என்பது அலுமினியம் (AI)
B - என்பது அலுமினியம் ஆக்சைடு (Al2O3)
C - என்பது சோடியம் மெட்டா
அலுமினேட் (NaAlO2)
2. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும் ஏன்?
நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம்
அலுமினியத்தை செயல்படாத நிலையில் வைத்துவிடும். அலுமினியத்தின் மேல் பகுதியில்
ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
3. அ) HF மூலக்கூறில்
உள்ள H மற்றும் Fக்கு இடையில் உள்ள
பிணைப்பு எது?
அயனிப் பிணைப்பு
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும்
ஆவர்த்தன பண்பு எது?
எலக்ட்ரான் கவர்தன்மை
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு
வேறுபடுகிறது?
தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக
செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கருவின் சுமை
அதிகரிக்கும் போது எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகமாகும். தொகுதியில் மேலிருந்து
கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது. ஏனெனில் ஆற்றல் மட்டத்தின்
எண்ணிக்கை அதிகமாகிறது.