நவீன ஆவர்த்தன
விதி
மென்டலீபின் ஆவர்த்தன அட்டவணையில்
தீர்க்க முடியாத சில முரண்பாடுகள் இருந்தன. உதாரணமாக அணுநிறை (39.95 amu) கொண்ட
ஆர்கான் தனிமம், முன்னாலும், அணு நிறை
(39.10 amu) கொண்ட பொட்டாசியம் தனிமம் பின்னாலும்
வரிசைப்படுத்தப்பட்டன. அணுநிறையை மையமாகக் கொண்டு அடுக்குவோமாயின், பொட்டாசியத்தின் இடத்தை, ஆர்கான் பெற்றிருக்கும்.
லித்தியம் சோடியம் உள்ள தொகுதியில் ஆர்கானை எந்த ஒரு வேதியலாளரும் வைக்க
மாட்டார்கள். இவை, அணுநிறை என்ற அடிப்படையை விட வேறு ஒரு
அடிப்படைப் பண்பிற்கு வழிவகுத்தன. மெண்டலீப் மற்றும் அவரோடு இருந்தவர்களுக்கு
அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அடிப்படை பண்பாக இருக்கிறது என்பது
அறியக்கூடாததாய் இருந்தது.
1912 ஆம் ஆண்டு
ஹென்றி மோஸ்லே என்ற பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்தலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார். அணு எண்
என்பது ஒரு அணுவின் உள்ள புரோட்டானின் எண்ணிக்கையையோ, அல்லது
எலக்ட்ரானின் எண்ணிக்கையையோ குறிக்கும். ஆகவே ஆவர்த்தன விதியைக் கீழ்க்கண்டவாறு
மேம்படுத்தி அறியலாம்.
“தனிமங்களின்
இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், அவற்றின் அணு
எண்களைச் சார்ந்து அமையும்".