தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - நினைவில் கொள்க | 10th Science : Chapter 8 : Periodic Classification of Elements
தனிமங்களின் ஆவர்த்தன
வகைப்பாடு
நினைவில் கொள்க
• நவீன ஆவர்த்தன விதி: தனிமங்களின்
இயல் மற்றும் வேதியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் சார்பாக அமையும்.
• தனிமங்களை சீரான முறையில், தொகுதிகளாவும்,
தொடர்களாவும், வரிசையாகக் கொண்ட அட்டவணை தனிம
வரிசை அட்டவணை ஆகும்.
• நன்கு வறுத்த உலோக ஆக்சைடை உலோகமாக
உருக்கி ஒடுக்கும் முறை உருக்கி பிரித்தல் ஆகும்.
• நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக்
அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது. பரப்பில் உருவாகும் ஆக்சைடு படலமே இதன்
காரணம்.
• இரும்பை அதன் தாதுவிலிருந்து
பிரித்தெடுக்க தேவையானவை, வறுத்தெடுக்கப்பட்ட தாது, கரி, சுண்ணாம்புக்கல் முறையே 8:4:1 என்ற விகிதத்தில்
ஆகும்.
• தாமிரப் பாத்திரம் மீது ஈரக்காற்று
படுவதால், அதன் புறப்பரப்பில்
பச்சை நிற படலம் ஆனது கார காப்பர் கார்பனேட்டால் உருவாகிறது.
• உலோகக் கலவை என்பது இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒருபடித்தான கலவையாகும்.
• இரசக்கலவை என்பது உலகமும், பாதரசமும் கலந்த
கலவையாகும். எ.கா Ag-Sn இரசக்கலவையானது பற்குழிகளை
அடைக்கப்பயன்படுகிறது.
• துருவின் வேதிப்பெயர் நீரேறிய
ஃபெரிக் ஆக்சைடு ஆகும். அதன் சமன்பாடு Fe2O3.xH2O