Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | அலுமினியம் குளோரைடு

தயாரித்தல், பண்புகள், பயன்கள் - அலுமினியம் குளோரைடு | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

   Posted On :  18.08.2022 05:08 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

அலுமினியம் குளோரைடு

உலோக அலுமினியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடை, ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்தும்போது அலுமினியம் ட்ரைகுளோரைடு கிடைக்கிறது.

அலுமினியம் குளோரைடு


தயாரித்தல்:

உலோக அலுமினியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடை, ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்தும்போது அலுமினியம் ட்ரைகுளோரைடு கிடைக்கிறது. இந்த வினைக்கலவையானது ஆவியாக்கப்பட்டு நீரற்ற அலுமினியம் குளோரைடு பெறப்படுகிறது.

2A1 + 6HCI → 2A1C13 + 3H2 

A1(OH)3 + 3HC1 → A1C13 + 3H2O

மெக்காஃபி செயல்முறை:

அலுமினா மற்றும் கல்கரி சேர்ந்த கலவையை குளோரினுடன் சேர்த்து வெப்பப்படுத்தி அலுமினியம் குளோரைடு பெறப்படுகிறது.

2A12O3 + 3C + 6C12 → 4A1C13 + 3CO2 

இது, தொழிற்முறையில், ஏறக்குறைய 1000K வெப்பநிலையில் அலுமினியத்தை குளோரினேற்றம் செய்து பெறப்படுகிறது.

2A1 + 3C12  1000K → 2A1C13 


பண்புகள்:

நீரற்ற அலுமினியம் குளோரைடு நிறமற்ற, நீர் உறிஞ்சும் பொருளாகும். அலுமினியம் குளோரைடின் நீர்க்கரைசல் அமிலத்தன்மை கொண்டது. இது ஈரக்காற்றில் புகைந்து ஹைட்ரஜன் குளோரைடை உருவாக்குகிறது.

A1C13 + 3H2O → A1(OH)3 + 3HC1

இது அம்மோனியம் ஹைட்ராக்சைடுடன் வினைப்பட்டு அலுமினியம் ஹைட்ராக்சைடை தருகிறது.

A1C13 + 3NH4OH → A1(OH)3 + 3NH4C1 

இது, அதிகளவு சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைப்பட்டு சோடியம் அலுமினேட்டை உருவாக்குகிறது.

A1C13 + 4NaOH → NaA1O2 + 2H2O + 3NaC1

இது லூயி அமிலங்களைப் போல செயல்படுகிறது, அம்மோனியா, பாஸ்பீன் மற்றும் கார்பனைல் குளோரைடு போன்றவற்றுடன் சேர்க்கைச் சேர்மங்களை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு. A1C13.6NH3 


அலுமினியம் குளோரைடின் பயன்கள்:

1. நீரற்ற அலுமினியம் குளோரைடு, பிரீடல் கிராஃப்ட் வினைகளில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது

2. இது, கனிம எண்ணெய்களை சிதைத்து பெட்ரோல் தயாரித்தலில் பயன்படுகிறது

3. இது, சாயங்கள் ,மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது

Tags : Preparation, Properties, Uses தயாரித்தல், பண்புகள், பயன்கள்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : Aluminium chloride Preparation, Properties, Uses in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : அலுமினியம் குளோரைடு - தயாரித்தல், பண்புகள், பயன்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I