தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் | p-தொகுதி தனிமங்கள்-I | வேதியியல் - சிலிக்கேட்டுகள் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I
சிலிக்கேட்டுகள்
சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை கொண்டநான்முகி (SiO4]4- அலகுகள் வெவ்வேறு வடிவங்களில் பிணைக்கப்பட்டு கிடைக்கும் கனிமங்கள் சிலிக் கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஏறத்தாழ 95% புவி மேற்பரப்பானது சிலிக்கேட் கனிமங்கள் மற்றும் சிலிக்கா ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது கண்ணாடி மற்றும் பீங்கான் தொழிற்சாலைகள் சிலிக்கேட் வேதியியலை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன.
[SiO4]-4 நான்முகி அலகுகள் பிணைக்கப்பட்டுள்ள விதத்தின் அடிப்படையில் சிலிக் கேட்டுகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஆர்த்தோ சிலிக்கேட்டுகள் (நீசோ சிலிக்கேட்டுகள்):
தனித்த [SiO4]-4 நான்முகி அலகுகளைக் கொண்ட எளிய வகை சிலிக்கேட்டுகள் ஆர்த்தோ சிலிக்கேடுகள் அல்லது நீசோ சிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்:
பீனசைட் – Be2SiO4 (Be2+ அயனிகள் O2- அயனிகளால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளன),
ஆலுவீன் - (Fe/Mg)2SiO4 (Fe2+ மற்றும் Mg2+ நேரயனிகள் O2- அயனிகளால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளன)
பைரோ சிலிக்கேட்டுகள் அல்லது சோரோ சிலிக்கேட்டுகள்:
[Si2O7]6- அயனிகளைக் கொண்டுள்ள சிலிக்கேட்டுகள், பைரோ சிலிக்கேட்டுகள் அல்லது சோரோ சிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. இரண்டு [SiO4]4- நான்முகி அலகுகள் ஒரு மூலையிலுள்ள ஒரு ஆக்ஸிஜன் அணுவை பங்கிட்டுக் கொள்ளும் போது இவை உருவாகின்றன. (இணையும்போது ஒரு ஆக்ஸிஜன் நீக்கப்படுகிறது) எடுத்துக்காட்டு: தார்ட்விடைட் - Sc2Si2O7
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட [SiO4]4- நான்முகி அலகுகள் வளைய அமைப் பில் இணைந்து உருவான (SiO3)n2n-அயனிகளைக் கொண்டுள்ள சிலிக்கட்டுகள், வளைய சிலிக்கட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிலிக்கேட் அலகும் அதன் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை மற்ற அலகுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு: பெரைல் [Be3A12 (SiO3)6] (இது ஒரு அலுமினோ சிலிக்கேட்டாகும், இதில் ஒவ்வொரு அலுமினியம் அயனியும் ஆறு ஆக்ஸிஜன் அணுக்களால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் அணுக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிணைக்கப்பட்ட n சிலிக்கேட் அலகுகளைக் கொண்ட சிலிக்கேட்டுகள் ஐனோசிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. மேலும், இவை சங்கிலி சிலிக்கேட்டுகள் மற்றும் இரட்டைச் சங்கிலி சிலிக்கேட்டுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
சங்கிலி சிலிக்கேட்டுகள்(அல்லது பைராக்சீன்கள்):
இவ் வகை சி லிக் கேட்டுகள் ‘n' எண்ணிக்கையிலான [SiO4 ]4- நான்முகி அலகுகள் நேர்க்கோட்டு அமைப்பில் இணைந்து உருவான [(SiO3)n]2n- அயனிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சிலிக்கேட் அலகும் அதன் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை மற்ற அலகுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு: ஸ்பொடுமின் - LiA1(SiO3)2-
இரட்டைச் சங்கிலி சிலிக்கேட்டுகள்(அல்லது ஆம்ஃபிபோல்கள்):
இவ்வகை சிலிக்கேட்டுகள் [Si4O11]n6n- அயனிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் இரண்டு வெவ்வேறு விதமான நான்முகி அமைப்புகள் காணப்படுகின்றன. (i)மூன்று முனைகளை பங்கிட்டுக்கொண்டவை (ii) இரண்டு முனைகளை மட்டும் பங்கிட்டுக்கொண்டவை.
எடுத்துக்காட்டு :
1) கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்): இவைநார்த்தன்மையுள்ள எளிதில் தீப்பற்றாத சிலிக் கேட்டுகள் ஆகும். எனவே, இவை வெப்பக் காப்பு பொருளாகவும், வேகத்தடை பட்டைகள் (brake linings), கட்டுமானப் பொருள் மற்றும் வடிகட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பெஸ்டாஸ்கள் புற்றுநோயுண்டாக்கும் சிலிக்கேட்டுகளாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
(Si2O5)n2n- அயனிகளைக் கொண்டுள்ள சிலிக்கேட்டுகள் தாள் சிலிக்கேட்டுகள் அல்லது பைலோ சிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில், ஒவ்வொரு [SiO4]4- நான்முகி அலகும் மற்ற அலகுகளுடன் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைப் பங்கிட்டுக்கொண்டு தாள் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. இவ்வகை தாள் சிலிக்கேட்டுகளில், தாள்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குகளுக்கிடையேயான கவர்ச்சி விசை மிகக் குறைவாக இருப்பதால் இவை கிராஃபைட் போன்றே எளிதில் பிளவுறுகின்றன. எடுத்துக்காட்டுகள் : டால்க் (Talc), மைக்கா (Mica), போன்றவை
[SiO4]4- நான்முகி அலகிலுள்ள அனைத்து ஆக்ஸிஜன் அணுக்களும் மற்ற நான்முகி அலகுகளுடன் பங்கிடப்பட்டு உருவாகும் முப்பரிமாண கட்டமைப்பைக் கொண்ட சிலிக்கேட்டுகள், முப்பரிமாண அல்லது டெக்டோ சிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றின் பொதுவான வாய்ப்பாடு (SiO2)n
எடுத்துக்காட்டு: குவார்ட்ஸ்
[SiO4]4- அலகுகளை [AlO4]5- அலகுகளைக் கொண்டு பதிலீடு செய்வதன்மூலம் இந்த டெக்டோ சிலிக்கேட்டுகளை முப்பரிமாண அலுமினோசிலிக்கேட்டுகளாக மாற்ற இயலும். எடுத்துக்காட்டுகள் : ஃபெல்ஸ்பர், ஜியோலைட்டுகள் போன்றவை.