Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சிலிக்கான் டெட்ரா குளோரைடு

தயாரித்தல், பண்புகள், பயன்கள் - சிலிக்கான் டெட்ரா குளோரைடு | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

   Posted On :  14.07.2022 02:07 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

சிலிக்கான் டெட்ரா குளோரைடு

சிலிக்கான் டெட்ரா குளோரைடு ஒரு நிறமற்ற புகையும் திரவமாகும், மேலும் இதன் உறைநிலை -70 °C.

சிலிக்கான் டெட்ரா குளோரைடு: 


தயாரித்தல்:

பீங்கான் குழாயில் வைக்கப்பட்டுள்ள சிலிக்கா மற்றும் கார்பன் கலந்த கலவையின்மீது உலர் குளோரின் வாயுவைச் செலுத்தி 1675K வெப்பநிலை வரை வெப்பப்படுத்தும்போது சிலிக்கான் டெட்ரா குளோரைடு பெறப்படுகிறது.

SiO2 + 2C + 2C12 → SiC14 + 2CO 

தொழிற்முறையில், 600K க்கு அதிகமான வெப்பநிலையில் ஹைட்ரஜன் குளோரைடு வாயுடன் சிலிக்கான் வினைபுரிந்து சிலிக்கான் டெட்ரா குளோரைடு உருவாகிறது.

Si + 4HC1 → SiC14 + 2H2


பண்புகள்:

சிலிக்கான் டெட்ரா குளோரைடு ஒரு நிறமற்ற புகையும் திரவமாகும், மேலும் இதன் உறைநிலை -70 °C. சிலிக்கான் டெட்ரா குளோரைடு ஈரக்காற்றில் நீராற்பகுப்படைந்து சிலிக்கா மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை தருகிறது.

SiC14 + 2H2O →  4HC1 + SiO2

சிலிக்கான் டெட்ரா குளோரைடு, ஈரம் கலந்த ஈதர் முன்னிலையில் நீராற்பகுப்படைந்து, நேர்க்கோடுச் சங்கிலி அமைப்புடைய பெர்குளோரோ சிலாக்ஸேன்களை [C1-(Si C12 O)n SiCl3 இங்கு n=1-6. உருவாக்குகின்றன.

ஆல்கஹால் கொண்டு பகுத்தல்

சிலிக்கான் டெட்ரா குளோரைடில் உள்ள குளோரைடு அயனியை, பொருத்தமான வினைக்காரணிகளைப் பயன்படுத்தி, OH, OR, போன்ற கருகவர் காரணிகளால் பதிலீடு செய்ய இயலும். எடுத்துக்காட்டாக, இது ஆல்கஹால்களுடன் சிலிசிக் எஸ்டர்களை உருவாக்குகிறது. 


SiCl4 + 4C2H5OH → Si(OC2H5)4 + 4HCI டெட்ராஈதாக்சி சிலேன் 

அம்மோனியா கொண்டு பகுத்தல்

இதேபோல சிலிக்கான் டெட்ரா குளோரைடானது, அம்மோனியாவால் பகுக்கப்பட்டு குளோரோசிலாக்சேன்கள் உருவாகின்றன.



பயன்கள்:

1. சிலிக்கான் குறைக்கடத்திகள் தயாரிப்பில் சிலிக்கான் டெட்ரா குளோரைடு பயன்படுகிறது. 

2. சிலிக்கா ஜெல், பீங்கான் பொருட்களை ஒட்டவைக்கப் பயன்படும் சிலிசிக் எஸ்டர்கள் ஆகியவற்றை தொகுக்கும் வினைகளில் ஆரம்பப் பொருளாக சிலிக்கான் டெட்ரா குளோரைடு பயன்படுகிறது. 



Tags : Preparation, Properties, Uses தயாரித்தல், பண்புகள், பயன்கள்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : Silicon tetrachloride Preparation, Properties, Uses in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : சிலிக்கான் டெட்ரா குளோரைடு - தயாரித்தல், பண்புகள், பயன்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I