Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | போரான் ட்ரைபுளூரைடு

தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள் - போரான் ட்ரைபுளூரைடு | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

   Posted On :  18.08.2022 05:07 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

போரான் ட்ரைபுளூரைடு

வேதியியல் : p-தொகுதி தனிமங்கள்-I : போரான் ட்ரைபுளூரைடு தயாரித்தல், போரான் ட்ரைபுளூரைடு பண்புகள், போரான் ட்ரைபுளூரைடு அமைப்பு, போரான் ட்ரைபுளூரைடு பயன்கள்

போரான் ட்ரைபுளூரைடு


தயாரித்தல்:

அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில் கால்சியம் புளூரைடை, போரான் ட்ரை ஆக்சைசைடுடன் வினைப்படுத்தும்போது போரான் ட்ரைபுளூரைடு பெறப்படுகிறது.

போரான் ட்ரை ஆக்சைடை கார்பன் மற்றும் புளூரின் ஆகியவற்றுடன் வினைப்படுத்தியும் இதனைப் பெற முடியும்.

B2O3 + 3C + 3F2 →2BF3 + 3CO 

ஆய்வகத்தில் பென்சீன் டையசோனியம் டெட்ராஃபுளூரோ போரேட்டை வெப்பச் சிதைத்தலின் மூலம் தூய BF3 தயாரிக்கப்படுகிறது.



பண்புகள்:

போரான் ட்ரைபுளூரைடு ஒருதள அமைப்பைப் பெற்றுள்ளது. இது ஒரு எலக்ட்ரான் குறைச் சேர்மமாகும், மேலும் எலக்ட்ரான் இரட்டைகளை பெற்றுக்கொண்டு ஈதல் சகப்பிணைப்புகளை உருவாக்குகிறது. இவை (BX4]- வகை அணைவுச்சேர்மத்தை உருவாக்குகின்றன.

BF3 + NH3 → F3B ← NH3 

BF3 + H2O →  F3B ←  +OH2

நீராற் பகுத்தலில் போரிக் அமிலம் கிடைக்கிறது. இது பின்னர் ஹைட்ரோ புளூரோபோரிக் அமிலமாக மாற்றப்படுகிறது

4BF3 + 12H2O →  4H3BO3 + 12HF

3H3BO3 + 12HF → 3H+ + 3[BF4]- + 9H2O / 4BF3 + 3H2O → H3BO3 + 3H+ 3[BF4]


போரான் ட்ரைபுளூரைடின் பயன்கள்: 

1. கரிம வேதியியலில் வினைவேக மாற்றியாக பயன்படும் HBF தயாரிக்க போரான் ட்ரைபுளூரைடு பயன்படுகிறது

2. இது புளூரினேற்ற காரணியாகவும் பயன்படுகிறது.



Tags : Preparation, Properties, Structure, Uses தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : Boron trifluoride Preparation, Properties, Structure, Uses in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : போரான் ட்ரைபுளூரைடு - தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I