வேதியியல் - p தொகுதி தனிமங்கள் - I : சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I
I . சரியான விடையைத் தேர்வு செய்க
1. போராக்ஸின் நீர்க்கரைசலானது
அ) நடுநிலைத் தன்மை உடையது
ஆ) அமிலத் தன்மை உடையது
இ) காரத்தன்மை உடையது
ஈ) ஈரியல்புத் தன்மை கொண்டது
விடை : இ) காரத்தன்மை உடையது
(Na2B4O7 + 7H2O ⇌ 2NaOH + 4H3BO3)
2. போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு (NEET)
அ) இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியைக் கொண்டுள்ளது.
ஆ) புரோட்டானைத் தரவல்லது.
இ) புரோட்டானுடன் இணைந்து நீர் மூலக்கூறினைத் தருகிறது.
ஈ) நீர் மூலக்கூறிலிருந்து OH- அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.
விடை : ஈ) நீர் மூலக்கூறிலிருந்து OH- அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது
3. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
அ) B2H6
ஆ) B3H6
இ) B4H10
ஈ) இவை எதுவுமல்ல
விடை : ஆ) B3H6
4. பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
அ) அலுமினியம்
ஆ) கால்சியம்
இ) மெக்னீசியம்
ஈ) சோடியம்
விடை : அ) அலுமினியம்
5. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான் களின் எண்ணிக்கை
அ) ஆறு
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) மூன்று
விடை : இ) நான்கு (இரண்டு 3c - 2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.)
6. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது?
அ) கார்பன்
ஆ) சிலிக்கன்
இ) காரீயம் (Lead)
ஈ) ஜெர்மானியம்
விடை : இ) காரீயம் (Lead)
7. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
அ) sp3 இனக்கலப்புடையது
ஆ) sp இனக்கலப்புடையது
இ) sp2 இனக்கலப்புடையது
ஈ) பகுதியளவு sp2 மற்றும் பகுதியளவு sp3 இனக்கலப்பு உடையது
விடை : இ) sp2 இனக்கலப்புடையது
8. கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜ னேற்ற நிலை
அ) +4
ஆ) -4
இ) +3
ஈ) +2
விடை : அ) +4
9. சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு
அ) (SiO3)2-
ஆ) (SiO4) 2-
இ) (SiO) -
ஈ) (SiO4)4-
விடை : ஈ) (SiO4)4-
10. சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு
அ) SiO2
விடை : ஆ)
11. R பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறை யுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக (monomer) இல்லாதது எது?
அ) Me3SiCl
ஆ) PhSiCl3
இ) MeSiCl3
ஈ) Me2SiCl2
விடை : அ) Me3SiCl
12. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது?
அ) கிராபைட்
ஆ) கிராஃபீன்
இ) ஃபுல்லரீன்
ஈ) உலர் பனிக்கட்டி (dry ice)
விடை : ஈ. உலர் பனிக்கட்டி (dry ice) (திட CO2 இதில் கார்பன் SP இனக்கலப்பில் உள்ளது)
13. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
அ) நான்முகி
ஆ) அறுங்கோணம்
இ) எண்முகி
ஈ) இவை எதுவுமல்ல
விடை: அ. நான்முகி
14. பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
அ) பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.
ஆ) Mg2SiO4 ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.
இ) [SiO4]4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்.
ஈ) ஃபெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல
விடை: ஈ) ஃபெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல
15. AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HF-ல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது?
அ) K3[AlF3H3]
ஆ) K3 [AlF6]
இ) AlH3
ஈ) K[AlF33H]
விடை :ஆ)K3 [AIF6] ( A1F3+3KF→ K3 [AIF6] )
16. கலம்-1 ல் உள்ளனவற்றை கலம்-II ல் உள்ளன வற்றுடன் பொருத்தி தகுந்த விடையினைத் தெரிவு செய்க.
கலம்-1 கலம்-II
A. போரசோல் 1. B(OH)3
B. போரிக் அமிலம் 2. B3N3H6
C. குவார்ட்ஸ் 3. Na2[B405(OH)4]8H20
D. போராக்ஸ் 4. Sio2
A B C D
அ) 2 1 4 3
ஆ) 1 2 4 3
இ) 1 2 3 4
ஈ) இவை எதுவுமல்ல
விடை: அ) 2 1 4 3
17. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை
அ) Cu, Mn
ஆ) Cu, Al, Mg
இ) Al, Mn
ஈ) Al, Cu, Mn, Mg
விடை : ஈ) Al, Cu, Mn,Mg
(A1 - 95%, Cu - 4%, Mn - 0.5%, Mg-0.5%)
18. வெப்ப இயக்கவியலின்படி, கார்பனின் அதிக நிலைப்புத் தன்மையுடைய வடிவம்
அ) டைமண்ட்
ஆ) கிராபைட்
இ) ஃபுல்லரீன்
ஈ) இவை எதுவுமல்ல
விடை: ஆ) கிராபைட்
19. அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?
அ) உலோக போரைடுகள்
ஆ) உலோக ஆக்சைடுகள்
இ) உலோக கார்பனேட்கள்
ஈ) உலோக கார்பைடுகள்
விடை : அ) உலோக போரைடுகள்
20. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக் கின்றது?
அ) AI < Ga < In <Tl
ஆ) Tl < In < Ga < Al
இ) In < Tl < Ga <Al
ஈ) Ga < In < Al < Tl
விடை : அ) Al <Ga < In <TI (மந்த இணை விளைவின் காரணமாக, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கிறது)