தயாரித்தல், பண்புகள், போராக்ஸின் பயன்கள் - போராக்ஸ் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I
போராக்ஸ் [Na2B4O710H2O]:
போராக்ஸ் என்பது டெட்ராபோரிக் அமிலத்தின் சோடிய உப்பாகும். இது கோலிமனைட் தாதுவை, சோடியம் கார்பனேட் கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.
போராக்ஸ், பொதுவாக Na2B4O7.10H2O என குறிப்பிடப்படுகிறது. ஆனால், இது நான்கணு அலகுகளை (B4O5-(OH)4]2- கொண்டுள்ளது. இந்த வடிவமானது பட்டக வடிவம் (prismatic form) என அறியப்படுகிறது. அணிகலன் அல்லது எண்முகி வடிவ போராக்ஸ் (Na2B4O75H2O) மற்றும் போராக்ஸ் கண்ணாடி (Na2B4O7) என மேலும் இரண்டு வடிவங்களில் போராக்ஸ் காணப்படுகிறது.
போராக்ஸ் காரத்தன்மை கொண்டது, மேலும் அதன் வெந்நீர்க் கரைசல் சிதைந்து போரிக் அமிலம் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடை தருவதால் காரத்தன்மை கொண்டது.
Na2B4O7 +7H2O → 4H3BO3 + 2NaOH
இதை வெப்பப்படுத்தும்போது ஒளிபுகும் போராக்ஸ் மணிகள் உருவாகின்றன.
போராக்ஸ், அமிலங்களுடன் வினைப்பட்டு சிறிதளவே கரையும் போரிக் அமிலத்தை தருகிறது.
Na2B4O7 + 2HC1 + 5H2O → 4H3BO3 + 2NaC1
Na2B4O7 + H2SO4 + 5H2O → 4H3BO3+ Na2SO4
இதை அம்மோனியாவுடன் வினைப்படுத்தும்போது போரான் நைட்ரைடை உருவாக்குகிறது.
Na2B4O7 + 2NH4C1 → 2NaC1 + 2BN + B2O3 + 4H2O
1. நிறமுள்ள உலோக அயனிகளை கண்டறிவதில் போராக்ஸ் பயன்படுகிறது.
2. இது, கண் கண்ணாடி, போரோசிலிக்கேட் கண்ணாடி, எனாமல், மற்றும் பளபளப்பான மண்பாண்டங்கள் தயாரித்தலில் பயன்படுகிறது.
3. இது உலோகவியலில் இளக்கியாகப் பயன்படுகிறது.
4. உணவு பதப்படுத்தியாகவும் செயலாற்றும் தன்மையுடையது.