தாவரங்களில் கடத்து முறைகள் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
11 வது தாவரவியல் : அலகு 11
தாவரங்களில் கடத்து முறைகள்
6. நன்கு நீரூற்றினாலும், மண்ணில்
உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது விளக்குக.
* மண் கரைசலில் அதிகப்படியான உப்பு காணப்படும்
போது,
அந்தத் தாவரம் அதிக ஆற்றலை செலவழித்து, நீரை
உறிஞ்ச வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் மண் கரைசலின் அதிகப்படியான சவ்வூடு பரவல்
திறன் (Osmotic Potential).
* அதனால் தான், அதிகப்படியான
உப்புப் பாங்கான நிலையில் தாவரம், அதன் சுற்றுப்புறத்தில்
தண்ணீர் இருந்த போதிலும் தண்ணீரை உறிஞ்ச இயலாது வாடிவிடுகிறது.
இது
உப்புத்தன்மையின் நீர் பற்றாக்குறை உண்டாக்கும் விளைவு என கருதப்படுகிறது.
7. தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரி லேஸ்
நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
* ஹேன்ஸ் (1940) இல்
பாஸ்பாரிலேஸ் நொதியை காப்பு செல்களில் கண்டறிந்து ஸ்டார்ச் (அ) தரச சர்க்கரை
இடைமாற்றக் கோட்பாட்டிற்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
* பகலில் பாஸ்பாரிலேஸ் நொதி தரசத்தினை
நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி pH அளவை
உயர்த்துவதால் உட்சவ்வூடு பரவல் நடைபெறுகிறது. இலைத்துளையும் திறக்கிறது.
* இரவில் இதற்கு எதிரான செயல்கள்
நடைபெறுகிறது.
பகல்
* தரசம் →
சர்க்கரை
* ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது
* pH அதிகரிக்கிறது.
* துணை செல்களிலிருந்து காப்பு செல்களுக்குள் நீர்
உட்புகுகிறது.
* காப்பு செல்கள் விறைப்படைகின்றன.
* இலைத்துளை திறக்கிறது.
இரவு
* சர்க்கரை →
தரசம்
* ஒளிச்சேர்க்கை நடைபெறவில்லை .
* pH குறைகிறது
* காப்பு செல்களிலிருந்து நீர் வெளியேறுகிறது
* காப்பு செல்கள் விறைப்பழுத்தம் குறைவதால்
தளர்வடைகின்றன.
* இலைத்துளை மூடுகிறது.
8. தாவரத்தில் சுக்ரோஸினை பெறும் ஒளிச்சேர்க்கை
செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.
i) வேர்கள்
ii) தண்டுகள் (பசுமையற்ற முதிர்ந்த தாவரத் தண்டுகள்)
iii) பூக்கள், காய்கள், கனிகள்.
9. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
நீரியல்
திறன் பற்றியக் கருத்தாக்கம் வெளியிடப்பட்டது (1960). - ஸ்லேடையர்
மற்றும் டெய்லர்.
வரையறை : ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை
மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை தூயநீரின் நீரியல் திறனுடன்
ஒப்பிடுவதாகும் (அ) ஒரு அமைப்பிலுள்ள நீர் மூலக்கூறுகள் எந்த அளவில் எளிதில் இடம்
பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.
* நீரியல் திறன் ѱ (சை) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அலகு பாஸ்கல் (Pa)
ஆகும்.
* ஒரு திட்ட வெப்பநிலையில் தூயநீரின் நீரியல்
ஆற்றல் =
0.
* தூய நீரில் கரைபொருளைச் சேர்க்கும் போது
அதனுடைய இயக்க ஆற்றல் குறைகிறது. கூடவே நீரியல் ஆற்றலும் குறைகிறது.
* எனவே கூட்டமாக அமைந்த செல்களில் ஒரு நீரியல்
திறன் சரிவு வாட்டம் ஏற்பட்டு அதிக நீரியல் திறன் பகுதியிலிருந்து குறைவான நீரியல்
திறன் கொண்ட பகுதிக்கு நீர் கடத்தப்படுகிறது.
i) கரைபொருளின் உள்ளார்ந்த திறன் (அ) அடர்த்தி = Ѱs.
ii) அழுத்தம் உள்ளார்ந்த திறன் = ѰP.
ஃநீரியல்
திறன் = Ѱw = Ѱs + ѰP
i) கரைபொருள் திறன் (Ѱs)
கரைபொருள்
நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும்.
கரைபொருள்
திறன் (அ) சவ்வூடு பரவல் இயல்திறன் தூய நீர் + கரைபொருள் →
திட்ட
வளிமண்டல அழுத்தத்தில் கரைசலின் நீரியல் திறன் = கரைசலின் கரைபொருள் திறன் Ѱw = Ѱs
ii) அழுத்தம் உள்ளார்ந்த திறன் (ѰP):
* கரைபொருள் உள்ளார்ந்த திறனின்
செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் இயங்குவிசை = ѰP
* ஒரு செல்லில் ѰP
அதிகரித்தால் Ѱw
அதிகரிக்கும்.
* நீர் செல்லுக்குள் செல்ல செல் விறைப்புத்
தன்மை அடையும்.
* இந்த நேர்மறை நீரியல் அழுத்தம் விறைப்பழுத்தம் எனப்படும்.
* செல்லிலிருந்து நீர் வெளியேற Ѱw
குறையும் செல் நெகிழ்வு ஏற்படுகிறது.
10. படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான
ஒரு செயற்கையான செல் பீக்கரில் உள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் அளவீடுகளைப்
பார்த்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.
அ) நீர்
செல்லும் பாதையினை அம்புக் குறியிட்டுக் காட்டுக.
ஆ) செல்லுக்கு
வெளியமைந்த கரைசலின் நிலை ஐ சோடானிக், ஹைப்போடானிக்
(அ) ஹைப்பர்டானிக்?
இ)
செல்லின் நிலை ஐசோடானிக், ஹைப்போடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
ஈ)
சோதனை முடிவில் செல்லானது அதிக தளர்வு நிலை, அதிக விறைப்பு
நிலை அல்லது அதே நிலையில் நீடிக்குமா?
உ) இச்செயற்கை
செல்லில் நடைபெறுவது உட்சவ்வூடு பரவலா அல்லது வெளிச்சவ்வூடு பரவலா? காரணம் கூறு.
விடை:
அ)
ஆ)
செல்லுக்கு வெளியே காணப்படும் கரைசல் ஹைப்போடானிக்.
இ)
செல் - ஹைப்பர்டானிக்
ஈ) செல்
- விறைப்பாக மாறும்.
உ)
உட்சவ்வூடு பரவல் (அ) எண்டாஸ்மாஸிஸ்
காரணம்: எண்டாஸ்மாஸிஸ் என்பது
தூயநீரில் அல்லது ஹைப்போடானிக் கரைசலில் வைக்கப்பட்ட செல் (அ) ஒரு ஆஸ்மாட்டிக் அமைப்பிற்குள் கரைப்பான் மூலக்கூறுகள் உட்செல்வது எண்டாஸ்மாஸிஸ்
(அ) உட்சவ்வூடு பரவல் எனப்படும்.
* செல்லுக்கு வெளியே பீக்கரில் காணப்படுவது
தூய நீர் (Ѱw = 0)
* நீரானது அந்த செயற்கை செல்லுக்குள்
செல்லுகிறது. அதாவது ஹைப்போடானிக் அமைப்பிலிருந்து ஹைப்பர்டானிக் கரைசலுக்குள்
செல்கிறது.