தாவரங்களில் கடத்து முறைகள் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
தாவரங்களில் கடத்து முறைகள்
மதிப்பீடு
1. விறைப்பழுத்தம் உடைய செல்லில்
அ) DPD=10 வளி; OP= 5 வளி; TP=10 வளி;
ஆ) DPD=0 வளி;
OP = 10 வளி; TP =10 வளி;
இ) DPD= 0 வளி; OP = 5 வளி; TP =10 வளி;
ஈ) (DPD=20 வளி; OP = 20 வளி; TP = 10
வளி;)
2. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.
1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில்
நடைபெறுவது.
2) சவ்விடை வழிப்பாதை வாக்கு வோலை உள்ளடக்கியது.
3) சிம்பிளாஸ்ட்
அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில்
நடைபெறுபவை.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 3 மற்றும் 4
ஈ) 1, 2, 3, 4
3. வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப்போக்கு சாத்தியம்?
அ)
இலைத்துளை நீராவிப்போக்கு
ஆ)
லெண்டி செல் நீராவிப்போக்கு
இ) க்யூட்டிகிள் நீராவிப்போக்கு
ஈ)
மேற்கூறிய அனைத்தும்
4. இலைத்துளைத் திறப்பு எதனைச் சார்ந்தது?
அ) பொட்டாசியம் அயனியின் உள் நுழைவு
ஆ)
பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்
இ)
குளோரைடு அயனியின் உள் நுழைவு
ஈ) ஹைட்ராக்ஸில்
அயனியின் உள் நுழைவு
5. முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?
அ)
விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி
அடைதல்.
ஆ) விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்.
இ)
உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம் பெயர்தல்.
ஈ) மேற்கூறியவற்றுள்
ஏதுமில்லை.