மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4| குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - குழந்தைக்கான உரிமைகள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
குழந்தைக்கான
உரிமைகள்
1989ஆம்
ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு
1 இன்படி பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர். குழந்தைகளின் உரிமைகள்
தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வெளியிடப்பட்டது.
குழந்தை
ஒரு முக்கியமான தேசியச் சொத்தாக கருதப்படுகிறது. தேசத்தின் எதிர்காலமானது அந்நாட்டின்
குழந்தைகள் எவ்வாறு, வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைப் பொறுத்தது. எனவே அனைத்து
வகையான சுரண்டல்கள் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தை பாதுகாப்பது நமது சமூகத்தின்
முக்கிய நோக்கமாக உள்ளது.இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள்
இயற்றப்பட்டுள்ளன.
1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு
1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
அ. கல்வி உரிமைச் சட்டம்
6 முதல்
14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு
வழங்குவதற்குச் சட்டப்பிரிவு வழிவகைச் செய்கிறது.
ஆ.குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும்
சீரமைப்புச்சட்டம், 1986)
இது
15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.
இ.சிறார் நீதிச்சட்டம், 2000 (குழந்தைகளைப்
பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)
இந்தச்
சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களைச்
சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
ஈ. போக்சோ (POCSO) சட்டம், 2012 பாலியல்
குற்றங்களிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட
வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.
1098 குழந்தைகளுக்கான உதவி மைய
எண்: இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட
24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள்,
குழந்தைத் திருமணம் மற்றும் - ஏதேனும் வன்கொடுமை CHILD ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட
LINE குழந்தைகளுக்குச் சிறப்பு H1098 கவனம் செலுத்தப்படுகிறது.