மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்| அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமைகள் என்ற கருத்து எங்கிருந்து ஆரம்பித்தது? | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
மனித உரிமைகள்
என்ற கருத்து எங்கிருந்து ஆரம்பித்தது?
அடிப்படை
உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில்
வேரூன்றியிருந்தது.
அ. எழுதப்பட்ட மனித உரிமை ஆவணங்களின் முன்னோடி
மகா சாசனம்
(The Magna Carta), 1215 (இங்கிலாந்து)- மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கியதுடன்
அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்தியது.
உரிமை மனு (The Petition of Right), 1628
(இங்கிலாந்து) - மக்கள் உரிமைகளின் தொகுப்பு. ஹேபியஸ் கார்பஸ் சட்டம், 1679, இங்கிலாந்து - மக்களின்
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்
ஆங்கில உரிமைகள் மசோதா, 1689 - சில அடிப்படை
சமூக / குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய
பிரான்சின் அறிவிப்பு, 1789 - சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும்
சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள்
மசோதா, 1791 - குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
ஆ. ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்
மனித
உரிமைகள் பற்றிய சிந்தனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது.
இப்போர் கற்பனை செய்ய முடியாத வகையில் மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்தது. போர்க் காலங்களில்
மனித உயிர்கள் அதன் மதிப்பினை இழந்தன. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள்
வாழ்க்கையின் இறுதிவரை கடுமையாக போராட வேண்டியிருந்தது. தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான
அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை இரண்டாம் உலகப் போரின் போது நடந்த
கொடுமைகள் தெளிவுபடுத்தின. உலகின் பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மனித உரிமைகள்
மறுக்கப்பட்டன மற்றும் நீக்கப்பட்டன. இது சில நாட்டின் அரசாங்கத்தால் மட்டுமே மனித
உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை நிரூபித்தது. வாழ்க்கை , சுதந்திரம், உணவு, இருப்பிடம்,
தேசம் ஆகியவை நியாயமற்ற முறையில் மறுக்கப்படமாட்டாது என்பதை மக்கள் உறுதிப்படுத்த விரும்பினர்.
1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்ட சான்பிரான்சிஸ்கோ
மாநாட்டில் மக்களின் இத்தகைய விருப்பங்கள் ஒரு முக்கியப் பங்கினை வகித்தன. இச்சூழ்நிலையில்
1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இந்தப்
பிரச்சனையில் கவனம் செலுத்தியது. அமைதி மற்றும் பாதுகாப்பு, மேம்பாடு, மனிதாபிமான உதவி
மற்றும் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அனைத்துக் கொள்கைகளிலும் திட்டங்களிலும்
முக்கிய கருப்பொருளாக இந்த மனித உரிமைகள் விளங்குகின்றன.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு - முகவுரை
மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும்,
உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகக் கொண்டவர்களாகவும்
எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும்
ஆவர்.
இ. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு
(UDHR)
ஐக்கிய
நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும்.
இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது.
எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி. ரூஸ்வெல்டின் மனைவி)
வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இறுதியாக உலக மனித
உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள்
வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா.
பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம்
217A). இதை நினைவு கூறும்
சைரஸ் சிலிண்ட ர் கி.மு.(பொ.ஆ.மு.)
539
பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ், அடிமைகளை விடுவித்து
மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார்.
இன சமத்துவத்தை நிலைநாட்டினார். மேற்கூறியவைகளும், மற்ற ஆணைகளும் கியூனிபார்ஃம் எழுத்துக்களில்
அக்காடியன் மொழியில் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில் பதிவு செய்யப்பட்டன. இது
ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை உலக
மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் நான்கு விதிகளுக்கு இணையாக உள்ளன.