Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO

   Posted On :  26.08.2023 08:49 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

முடிவுரை

மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். மனித உரிமைகளுக்கான புரிதலும் மரியாதையையும் நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது.

 

மீள்பார்வை

* மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களும் அனுபவிக்க உரிமை பெற்ற சுதந்திரங்களாகும்

* அவற்றில் வாழ்வியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் அடங்கும்.

* மனித உரிமைகள் இயல்பானவை, மாற்றித்தர இயலாதவை, சார்புடையவை மற்றும் பிரிக்க இயலாதவை

* ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகள் சட்டத்தின் முழுமையான அமைப்பை உருவாக்கியது ஆகும்.

* உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. வின் பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* மனித உரிமைகள் கண்ணியம், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

* மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

* மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும்




மேற்கோள் நூல்கள்

1. NCERT - India and the World, 2004

2. Arun Ray., National Human Rights Commission of India, Khama Publisher, New Delhi,2004

3. Parikshith K. Naik., and Mehrabudin wakman., Human Rights & International Organisations, Trinity Publication, 2013

 

இணையதள வளங்கள்

1. www.shrc.tn.gov.in

2. www.nhrc.nic.in

3. www.un.org

 

இணையச் செயல்பாடு

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

இந்த செயல்பாட்டின் மூலம் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய காலக்கோடு நிகழ்வுகளை படவிளக்கத்துடன் அறிந்துகொள்ள முடியும்.


படி -1 URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான

-இணையப்பக்கத்திற்கு செல்க.

படி - 2 பக்கத்தின் நடுவில் 'IN FOCUS'என்பதன் மேல் சொடுக்கவும்

படி -3 இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய காலவரிசை நிகழ்வுகளை அறிய பக்கத்தின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் காலக்கோடு வரிசையில் ஏதாவது ஒரு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும்.(உ.தா.1948)

உரலி: https://in.one.un.org/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டும்

*தேவையெனில் Adobe Flash ஐ அனுமதிக்க

Tags : Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO : Conclusion, Recap, Glossary Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் : முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்