மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பெண்கள் உரிமைகள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
பெண்கள் உரிமைகள்
பெண்கள் மற்றும் சிறுமியின் உரிமைகளும் மனித உரிமைகளாகும். பெண்களுக்கு
தங்களது உரிமைகளை முழுமையாகவும் சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும்
விடுபடவும் உரிமை உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவைகள் மனித
உரிமைகளுக்கான அடிப்படைகள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள்
இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதிசெய்கிறது.
1979ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து
வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டது.
இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா அழைக்கப்படுகிறது.
1995ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர்
மாநாடு, பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான
ஒரு தளத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள் இந்த இலக்குகளை அடைவதற்கு
தேவையானவற்றை கண்காணிக்கிறது. மேலும் பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக
யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி
அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. பெண்களும் சிறுமிகளும் உரிமைகளை முழுமையாக
அனுபவிக்கும் போதுதான் உண்மையான சமத்துவம் நிலவுகிறது.
பெற்றோர் மற்றும் மூத்த
குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம், 2007