அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
அலகு - 4
மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
கற்றலின்
நோக்கங்கள்
>மனித உரிமைகள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுதல்
>உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உள்ள தொடர்பினைப்புரிந்து கொள்ளுதல்
>மனித உரிமைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுதல்
>மனித உரிமைகள் அனைவருக்கும் உரியது என்பதைப் பற்றி புரிந்து கொள்ளுதல்
>1948இல் நடைமுறைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிவிப்பின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்து
கொள்ளுதல்
அறிமுகம்
பிறப்பால்
அனைவரும் சமம். உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு.
மனித உரிமைகளானது தனிநபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக
மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதி செய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும்
குறிப்பிடுகிறது. மக்களின் சமஉரிமைகளை ஒவ்வொரு நாடும் உறுதி செய்கிறது.
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித
உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை , மொழி மற்றும்
சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில்
அடிமைத்தனம்மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம்
மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை, வேலை மற்றும் கல்வி பெறும் உரிமை ஆகியவை
அடங்கும்.