Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

   Posted On :  09.08.2022 05:19 pm

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : உயிரியல் தாவரவியல் குழு புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)


1. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை  தேர்வு செய்யவும் 

அ) பாலிலா இனப்பெருக்கத்தில் கேமீட்டுகள் ஈடுபடுகின்றன 

ஆ) பாக்டீரியங்கள் மொட்டுவிடுதல் வழி பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன 

இ) கொனிடியங்களைத் தோற்றுவித்தல் ஒரு பாலினப்பெருக்க முறையாகும் 

ஈ) ஈஸ்ட் மொட்டுவிடுதல் வழி இனப்பெருக்கம் செய்கின்றன 

விடை : ஈ) ஈஸ்ட் மொட்டுவிடுதல் வழி இனப்பெருக்கம் செய்கின்றன 

 

2. புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர் 

அ) S.R. காஷ்யப்

ஆ) P.மகேஸ்வரி 

இ) M.S.சுவாமிநாதன் 

ஈ) K.C. மேத்தா

விடை : ஆ) P.மகேஸ்வரி 

 

3. சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க

அ) கிழங்கு - அல்லியம் சீப்பா 

ஆ) தரைகீழ் உந்துதண்டு - பிஸ்டியா 

இ) மட்டநிலத் தண்டு - மியூசா 

ஈ) வேர்விடும் ஓடுதண்டு – ஜிஞ்ஜிஃபெர்

விடை : இ) மட்டநிலத்தண்டு – மியூசா

 

4. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் 

அ) J.G.கோல்ரூட்டர் 

ஆ) G.B.அமிசி 

இ) E.ஸ்டிராஸ்பர்கர் 

ஈ) E.ஹேன்னிங்

விடை : ஆ) G.B.அமிசி 

 

5. மயோசோட்டிஸின் மகரந்ததுகளின் அளவு 

அ) 10 மைக்ரோ மீட்டர் 

ஆ) 20 மைக்ரோ மீட்டர் 

இ) 200 மைக்ரோ மீட்டர் 

ஈ) 2000 மைக்ரோ மீட்டர்

விடை : அ) 10 மைக்ரோ மீட்டர் 

 

6. மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் 

அ) நுண் வித்து 

ஆ) பெரு வித்து 

இ) உட்கரு 

ஈ) முதல் நிலை கருவூண் திசு

விடை : அ) நுண் வித்து

 

7. பொருத்துக 

I. வெளி கருவுறுதல் - மகரந்தத்துகள் 

II. மகரந்ததாள் வட்டம் - மகரந்தப்பைகள் 

III. ஆண் கேமீட்டகத்தாவரம் - பாசிகள் 

IV) முதல்நிலை புறப்பக்க அடுக்கு - மகரந்தத்தாள்கள் 

  I II III IV 

அ) iv i ii iii 

ஆ) iii iv i ii 

இ) iii iv ii i 

ஈ) iii i iv ii

விடை : ஆ) I (iii) II (iv) III (i) IV (ii)

 

8. மகரந்தப்பைசுவர் அடுக்குகளை மகரந்த அறையிலிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும் 

அ) புறத்தோல், மைய அடுக்கு, டபீட்டம், எண்டோதீசியம் 

ஆ) டபீட்டம், மைய அடுக்கு, புறத்தோல், எண்டோதீசியம் 

இ) எண்டோதீசியம், புறத்தோல், மைய அடுக்கு, டபீட்டம் 

ஈ) டபீட்டம், மைய அடுக்கு, எண்டோதீசியம். புறத்தோல் 

விடை : ஈ) டபீட்டம், மைய அடுக்கு, எண்டோ  தீசியம், புறத்தோல் 

 

9. தவறான இணையைக் கண்டுபிடிக்கவும் 

அ) ஸ்போரோபொலினின் – மகரந்தத்துகளின் எக்சைன் 

ஆ) டபீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு 

இ) சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு 

ஈ) வழி நடத்தி - சூல்துளை நோக்கி மகரந்தக்குழாய் வழி நடத்துதல் |

விடை : எல்லாம் சரியான இணை 

 

10. உறுதிச்சொல் : தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோ பொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது 

காரணம் : ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது. 

அ) உறுதிச்சொல் சரி, காரணம் தவறு 

ஆ) உறுதிச்சொல் தவறு, காரணம் சரி

இ) உறுதிச்சொல், காரணம் - இரண்டும் தவறு 

ஈ) உறுதிச்சொல், காரணம் இரண்டும் சரி

விடை : ஈ) உறுதிச்சொல், காரணம் இரண்டும் சரி 

 

11. மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும் 

அ) அடித்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல் 

ஆ) சூல்களில் அதிக சூல்திசு பெற்றுள்ளது 

இ) புறத்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல் 

ஈ) சூல்களில் ஓரடுக்கு சூல்திசு காணப்படுகிறது

விடை : அ, ஈ இரண்டுமே சரியான கூற்று 

 

12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது 

அ) சூல் 

ஆ) கருப்பை 

இ) சூல்திசு

ஈ) கருவூண் திசு

விடை : ஆ) கருப்பை 

 

13. ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?

அ) 8 

ஆ) 12 

இ) 6 

ஈ) 2 

விடை : இ) 6 (3n) 

 

14. ஊடு கடத்தும் திசு காணப்படுவது

அ) சூலின் சூல்துளைப் பகுதி 

ஆ) மகரந்தச்சுவர் 

இ) சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி 

ஈ) சூலுறை

விடை : இ) சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி 

 

15. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?

அ) விதை உள்ளுறை 

ஆ) முளைவேர் 

இ) விதையிலை மேல்தண்டு

ஈ) விதைத்தழும்பு 

விடை : ஈ) விதைத்தழும்பு 

 

16. 'X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டு ள்ளது. இம் மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது? 

அ) நீர் 

ஆ) காற்று 

இ) பட்டாம்பூச்சி 

ஈ) வண்டுகள்

விடை : ஆ) காற்று 

 

17. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. 

i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும் 

ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல்அலகு முன் முதிர்ச்சியடையும் 

iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது 

iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது 

அ) i மற்றும் ii சரியானவை 

ஆ) ii மற்றும் iv சரியானவை

இ) ii மற்றும் iii சரியானவை 

ஈ) 1 மற்றும் iv சரியானவை

விடை : ஆ) ii மற்றும் iv சரியானவை 

 

18. முளைவேர் உறை காணப்படும் தாவரம்

அ) நெல் 

ஆ) பீன்ஸ் 

இ) பட்டாணி 

ஈ) டிரைடாக்ஸ்

விடை : அ) நெல் 

 

19. கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை

அ) எண்டோகார்ப் 

ஆ) எப்பிகார்ப் 

இ) மீசோகார்ப் 

ஈ) விதை

விடை : ஈ) விதை 

 

20. பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை 

அ) 1 செல் நிலை 

ஆ) 2 செல் நிலை 

இ) 3 செல் நிலை 

ஈ) 4 செல் நிலை

விடை : ஆ) 2 செல் நிலை 

Tags : Asexual and Sexual Reproduction in Plants | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Choose the Correct Answers (Pure Science Group) Asexual and Sexual Reproduction in Plants | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்