தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - காப்-டக்லஸ் உற்பத்தி சார்பு | 11th Economics : Chapter 3 : Production Analysis
காப்-டக்லஸ் உற்பத்தி சார்பு
காப்-டக்லஸ் உற்பத்தி சார்பு என்பது பொதுவாக நடைமுறையில் பயன்படுத்தப்படும் சமன்பாடு ஆகும். இது உழைப்பு மற்றும் மூலதனம் என்ற உள்ளீடுகளை பயன்படுத்தி எவ்வளவு உற்பத்தியை பெற முடியும் என்பதை விளக்குகிறது. தொழில் நிறுவனங்கள் தம்முடைய உற்பத்தி அளவினை பிற தொழில் நிறுவனங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யவும் இது பயன்படுகிறது. உற்பத்தியில் உழைப்பின் பங்கினையும் மூலதனத்தின் பங்கினையும் ஒப்பிடவும் இது உதவுகிறது. இச்சார்பு வளர்ந்த, நவீன, நிலையான நாடுகளில் பொருளாதர பகுத்தாய்விற்கு பயன்படுத்தப்படுகிறது.
காப் - டக்லஸ் உற்பத்தி சார்பினை அளித்தவர்கள் சார்லஸ் W காப் மற்றும் பால் H டக்லஸ் ஆவார்கள். இதனை அமெரிக்க உற்பத்தி தொழிற்சாலையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளித்தார்கள். இச்சார்பு ஒருபடித்தான சமச்சீர் தன்மை வாய்ந்த உற்பத்தி சார்பு ஆகும். இச்சார்பு உற்பத்தி காரணிகளை ஓரளவிற்கு மட்டுமே ஒன்றுக்கொன்று பதிலீட்டு பண்டமாக பயன்படுத்த இயலும் என்பதை விளக்குகிறது.
காப் டக்லஸ் உற்பத்தி சார்பு கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகின்றது.
Q = AL α Kß
இதில்
Q = வெளியீடு
A = நேர்மறை நிலை மதிப்பு
K = மூலதனம்
L= உழைப்பு
α மற்றும் ß ஆகியவை நேர்மறை பின்னம் ஆகும். இவை உற்பத்தி உள்ளீடுகளான உழைப்பு மற்றும் மூலதனத்தின் அளவை மாற்றும்போது எந்த அளவு உற்பத்தியில் மாற்றம் வரும் என்பதைக் குறிக்கின்றன. ß = (1- α ) என்பது (α+ß ) = 1 மாறாத விகித விளைவை குறிக்கும். காரணிகளின் திறனை ß/α சதவீதத்தின் மூலம் கணக்கிடலாம்
I. = (α+ß ) = 1 என்றால் மாறாத விகித விளைவு
II. (α+ß ) < 1 என்றால் குறைந்து செல் விகித விளைவு
III. (α+ß ) >1 வளர்ந்து செல் விகித விளைவு
• இந்த உற்பத்தி சார்பின் படி, உற்பத்தி காரணிகளின் விகிதாச்சார அதிகரிப்பிற்கேற்ப வெளியீடும் அதே விகிதாச்சார அளவு அதிகரிக்கும். • காப் டக்லஸ் உற்பத்தி சார்பு மாறாத விகித அளவு விளைவை மட்டும் விளக்குகிறது.
• காப்டக்ளஸ் உற்பத்தி சார்பு உழைப்பு மற்றும் மூலதனம் ஆகிய இரண்டு காரணிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. உற்பத்தி செய்வதற்கு உழைப்பும் மூலதனமும் அவசியம் என்கிறது.
• உழைப்பு நான்கில் மூன்று பங்கும், மூலதனம் நான்கில் ஒருபங்கும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
• உற்பத்தி காரணிகளுக்கிடையேயான பதிலீட்டு நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாகும்.
• காப் டக்லஸ் உற்பத்திச் சார்பானது உழைப்பையும், மூலதனத்தனத்தையும் பயன்படுத்தி எவ்வளவு உற்பத்தி செய்யமுடியும் என்பதெற்கென தனி சமன்பாட்டைக் கொண்டுள்ளது. உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், இடைப்பட்ட தொழிற்சாலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அனுபவரீதியாக பயில உதவுகிறது. உழைப்பு மற்றும் மூலதனம் ஆகியவற்றின் பங்களிப்பை மொத்த உற்பத்தி கொண்டு தீர்மானிக்கலாம். இன்றைய அளவிலும், நவீன, வளர்ந்த மற்றும் நிலையான நாடுகளில் பொருளாதார சிக்கனங்கள் சார்ந்த ஆய்விற்கு உதவுகிறது.