பொருளாதாரம் - அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis
அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள்
1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)
அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1). பொருளின் விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும் போது, பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும்.
2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)
அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1). விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீத மாற்றமே ஏற்படும்.
3. குறைவான நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)
அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே அமையும் (Es<1). விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும்.
4. முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு (பார்க்க படம் 3.13)
அளிப்பு நெகிழ்ச்சி பூஜ்யத்திற்கு சமமாக உள்ளது (Es = 0) விலையில் சமமாக ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5. முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு (பார்க்க படம் 3.13)
அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (es=∞). விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை எற்படுத்தும்