புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - தரவுகளைச் சேகரித்தல் | 7th Maths : Term 3 Unit 5 : Statistics
தரவுகளைச் சேகரித்தல்
குறிப்பிட்டத் தகவலை மனதில் கொண்டு, நாம் தரவுகளைச் சேகரிக்க வேண்டும். ஒருவேளை, நமக்குத் தேவையான தகவலானது 7 ஆம் வகுப்பு மாணவர்களின் உயரமாக இருந்தால், அம்மாணவர்களின் சுகாதாரப் பதிவு தொடர்பான தரவைக் காட்டிலும் அவர்களின் உயரங்களையும், வயது தொடர்பான குறிப்பிட்ட தரவுகளையும் சேகரிக்க வேண்டும்.
மேலேயுள்ள கலந்துரையாடலிலிருந்து, ஒரு தரவு சேகரிக்கப்பட வேண்டியதன் நோக்கத்தை அந்தந்தத் தரவு சேகரிப்புச் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்னர் மனதில் கொள்ள வேண்டும். அதுவே நாம் விரும்பிய தகவலை மட்டுமே பெற முடிவதோடு சேகரிக்கப்பட்டத் தரவுகளுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள பல சூழ்நிலைகளில் இருந்துதான் தரவுகளை உருவாக்க முடியும். உதாரணமாக,
• ஏழாம் வகுப்பு மாணவர்களின் உயரம்.
• இரண்டாம் பருவத் தேர்வுகளில் ஏழாம் வகுப்பு மாணவர்களின் செயல்திறன்.
• உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் நடப்பட்ட மரக் கன்றுகளின் எண்ணிக்கை.
• 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் பதிவான வெப்பநிலை.
• 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான மழையின் அளவு.