Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | தரவுகளின் அமைப்பு

புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - தரவுகளின் அமைப்பு | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

   Posted On :  10.07.2022 01:57 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

தரவுகளின் அமைப்பு

நாம் தரவுகளைச் சேகரித்து அவற்றைப் பதிவுசெய்து ஒழுங்கமைக்கிறோம். இதைப் புரிந்துகொள்வதற்கு ஏழாம் வகுப்பில் பயிலும் 10 மாணவர்களின் எடையைக் கையாளும் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.

தரவுகளின் அமைப்பு

நாம் தரவுகளைச் சேகரித்து அவற்றைப் பதிவுசெய்து ஒழுங்கமைக்கிறோம். இதைப் புரிந்துகொள்வதற்கு ஏழாம் வகுப்பில் பயிலும் 10 மாணவர்களின் எடையைக் கையாளும் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். இந்தத் தரவானது மாணவர்களின் எடை, அவர்களின் உயரத்திற்குப் பொருத்தமானதாக உள்ளதா எனச் சரிபார்ப்பதற்குச் சேகரிக்கப்படுகின்றது. அந்தந்தத் தரவுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன

அன்பு - 20 கிலோ கிராம்; நம்பி - 19 கிலோ கிராம்; நந்திதா - 20 கிலோ கிராம்; அருள் - 24 கிலோ கிராம்; மாரி - 25 கிலோ கிராம்; மது - 22 கிலோ கிராம்; பவித்ரா – 23 கிலோ கிராம்; பீமன் - 26 கிலோ கிராம்; ஆர்த்தி - 21 கிலோ கிராம்; குமணன் – 25 கிலோ கிராம்.

பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சிப்போம்

(i) அனைவரிலும் மிகக் குறைந்த எடை கொண்டவர் யார்

(ii) 22 கிலோ கிராம் முதல் 24 கிலோ கிராம் வரை எடையுள்ளவர்கள் எத்தனை பேர்

(iii) அனைவரிலும் மிக அதிக எடை கொண்டவர் யார்

(iv) 23 கிலோவுக்கு மேல் எத்தனை குழந்தைகளும் 23 கிலோவுக்குக் கீழ் எத்தனை குழந்தைகளும் உள்ளனர்

மேற்கண்டத் தரவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது அல்ல. எடைகளின் வரிசைக்கு ஏற்ற முறையில் அமைத்தால், கேள்விகளுக்குப் பதிலளிக்க எளிதாக இருக்கும்.


இப்போது நாம் மேற்கண்ட கேள்விகளுக்கு எளிதாகப் பதிலளிக்க முடியும். எனவே தரவுகளிலிருந்து எந்தவிதமான அனுமானங்களையும் பெறுவதற்காகத் தரவை ஒழுங்கமைக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

தரவுகளின் அமைப்பானது மிக விரைவாகவும் தரவுகளின் ஒட்டுமொத்த பார்வையைப் பெறுவதற்கு உதவியாகவும் இருக்கும். தரவுகளைச் சரியாகக் கட்டமைப்பதனால், அதனைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் அதன்படி முடிவெடுக்கவும் எளிய வழி கிடைக்கும்.


Tags : Statistics | Term 3 Chapter 5 | 7th Maths புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 5 : Statistics : Organisation of Data Statistics | Term 3 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : தரவுகளின் அமைப்பு - புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்