புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 | 7th Maths : Term 3 Unit 5 : Statistics
பயிற்சி 5.1
1. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
i) முதல் 10 இயல் எண்களின் சராசரி ________
விடை :5.5
ii) 15 புத்தகங்களின் சராசரி விற்பனை விலை ₹ 235 எனில், மொத்த விற்பனை விலை ________ ஆகும்.
விடை : 3,525
iii) 2, 9, 5, 4, 4, 8, 10 ஆகிய மதிப்பெண்களின் சராசரியானது ________
விடை : 6
iv) முழுக்களான -10 இக்கும் 10 இக்கும் இடையேயுள்ள எண்களின் சராசரி ------- ஆகும்.
விடை : 0
2. 8 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களின் வயது 13, 12, 13, 14, 12, 13, 13, 14, 12, 13, 13, 14, 13, 12, 14 எனில், அம்மாணவர்களின் சராசரி வயதைக் கண்டறியவும்.
விடை :
சராசரி = மாணவர்களின் வயதின் கூடுதல் / மொத்த மாணவர்கள்
= 13 + 12 + 13 + 14 + 12 + 13 + 13 + 14 + 12 + 13 + 13 + 14 + 13 + 12 + 14 / 15
= 195 / 15
= 13
3. அறிவியல் தேர்வில் 14 மாணவர்களின் மதிப்பெண்கள் (50 மதிப்பெண்களுக்கு) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 34, 23, 10, 45, 44, 47, 35, 37, 41, 30, 28, 32, 45, 39 எனில்,
i) சராசரி மதிப்பெண்ணைக் காண்க.
ii) அதிகபட்ச மதிப்பெண்ணைக் காண்க.
iii) குறைந்தப்பட்ச மதிப்பெண்ணைக் காண்க.
விடை :
மதிப்பெண்களை வரிசைப்படுத்தவும் 10, 23, 28, 30, 32, 34, 35, 37, 39, 41, 44, 45, 45, 47
i) மதிப்பெண் சராசரி = 10 + 23 + 28 + 30 + 32 + 34 + 35 + 37 + 39 + 41 + 44 + 45 + 45 + 47 / 14
= 490 / 14
= 35
ii) அதிகபட்ச மதிப்பெண் 47
iii) குறைந்தபட்ச மதிப்பெண் 10
4. ஒரு குழுவில் உள்ள 11 மாணவர்களின் சராசரி உயரம் 150 செ.மீ அம்மாணவர்களின் உயரங்கள் 154 செ.மீ, 145 செ.மீ, Y செ.மீ, Y + 4 செ.மீ, 160 செ.மீ, 151 செ.மீ, 149 செ.மீ, 149 செ.மீ, 150 செ.மீ, 144 செ.மீ மற்றும் 140 செ.மீ எனில் Y இன் மதிப்பைக் கண்டுபிடித்து, இரண்டு மாணவர்களின் உயரத்தைக் காண்க.
தீர்வு :
150 = 154 + 145 + y + y + 4 + 160 + 151 + 149 + 149 + 150 + 144 + 140 / 11
150 × 11 = 2y + 1346
1650 - 1346 = 2y
2y = 304
y = 304 / 2
y = 152
இரண்டு மாணவர்களின் உயரங்கள் முறையே 152 செ.மீ, 156 செ.மீ
5. ஒரு கிரிக்கெட் அணி கடைசி 10 போட்டிகளில் பெற்ற ஓட்டங்களின் சராசரி 276 ஆகும். அந்த ஓட்டங்கள் 235, 400, 351, x, 100, 315, 410, 165, 260, மற்றும் 284 எனில், அந்த அணி 4 வது போட்டியில் பெற்ற ஓட்டங்களைக் கண்டுபிடி?
தீர்வு :
276 = 235 + 400 + 351 + x + 100 + 315 + 410 + 165 + 260 + 284 / 10
276 × 10 = 2520 + x
2760 - 2520 = x
x = 240
6. பின்வரும் தரவுகளின் சராசரியைக் காணவும்.
5.1, 4.8, 4.3, 4.5, 5.1, 4.7, 4.5, 5.2, 5.4, 5.8, 4.3, 5.6, 5.2, 5.5
தீர்வு :
சராசரி x = Σx / n
= 5.1 + 4.8 + 4.3 + 4.5 + 5.1 + 4.7 + 4.5 + 5.2 + 5.4 + 5.8 + 4.3 + 5.6 + 5.2 + 5.5 / 14
= 70.0 / 14
x = 5
7. 10 மதிப்புகளின் கூட்டுச் சராசரி 22 எனக் கண்டறியப்பட்டது. மேலும் ஒரு புதிய மதிப்பு 44 ஐ. அந்த மதிப்புகளுடன் சேர்த்தால், புதிய சராசரி என்னவாக இருக்கும்?
தீர்வு :
n = 10, x = 22
x= Σx / n
Σx = x× n
= 10 × 22 = 220
புதிய Σx = Σx + புதிய மதிப்பு
= 220 + 44
= 264
புதிய n = 11
ஃ புதிய சராசரி = புதிய Σx / புதிய n
= 264 / 11
x = 24
கொள்குறி வகை வினாக்கள்
8. ________ என்பது முழுத் தரவின் பிரதிநிதித்துவ மதிப்பு.
i) சராசரி
ii) வீச்சு
iii) குறைந்தபட்ச மதிப்பு
iv) அதிகபட்ச மதிப்பு
விடை: i) சராசரி
9. முதல் ________ இரட்டை எண்களின் சராசரி
i) 4
ii) 16
iii) 5
iv) 10
விடை : ii) 16
10. இரண்டு எண்களின் சராசரி 20. அவற்றுள் ஒரு எண் 24 எனில், மற்றொரு எண்
i) 16
ii) 26
iii) 20
iv) 40
விடை : i) 16
11. தரவுகள் 12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி 18 எனில், x இன் மதிப்பைக் காண்க.
i) 18
ii) 16
iii) 14
iv) 22
விடை : iii) 14
விடைகள் :
பயிற்சி 5.1
1. (i) 5.5 (ii) 3,525 (iii) 6 (iv) 0
2. 13
3. (i) 35 (ii) 47 (iii) 10
4.
5. 240
6. 5
7. 24
கொள்குறி வகை வினாக்கள் :
8. (i)
9. (ii) 16
10. (i) 16
11. (iii) 14