Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 5.3 (இடைநிலை (இடைநிலையளவு))

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 (இடைநிலை (இடைநிலையளவு)) | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

   Posted On :  10.07.2022 04:48 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.3 (இடைநிலை (இடைநிலையளவு))

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : இடைநிலை (இடைநிலையளவு) : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3

1. கோடிட்ட இடங்களை நிரப்புக

i) தரவுகள் 12, 14, 23, 25, 34, 11, 42, 45, 32, 22, 44 ஆகியவற்றின் இடைநிலையளவு ________

விடை : 25 

ii) முதல் 10 இரட்டைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு ________

விடை : 11 


2. கொடுக்கப்பட்டத் தரவின் இடைநிலையைக் கண்டறியவும் 35, 25, 34, 36, 45, 18, 28.

தீர்வு

தரவினை வரிசைப்படுத்தவும் 18, 25, 28, 34, 35, 36, 45 

n = 7 (ஒற்றை எண்)

இடைநிலை = [ (n + 1) / 2 ]  ஆவது உறுப்பு

= [ (7 + 1) / 2 ] ஆவது உறுப்பு

= (8 / 2) ஆவது உறுப்பு

= 4வது உறுப்பு 

இடைநிலை = 34


3. ஒரு இருசக்கரவாகனம் விற்பனை செய்யும் கடையின் வாராந்திர விற்பனையானது, கடந்த 14 வாரங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 10, 6, 8, 3, 5, 6, 4, 7, 12, 13, 16, 10, 4, 7 இத்தரவின் இடைநிலையளவைக் காண்க

தீர்வு

விவரங்களை வரிசைப்படுத்தவும் 3, 4, 4, 5, 6, 6, 7, 7, 8, 10, 10, 12, 13, 16 n = 14 (இரட்டை எண்)

இடைநிலை = ( n / 2 ) ஆவது உறுப்பு மற்றும் 

[ (n / 2) + 1 ] ஆவது உறுப்பின் சராசரி

= (7 + 7) / 2

= 14 / 2

= 7 

இடைநிலை = 7 


4. 36, 33, 45, 28, 39, 45, 54, 23, 56, 25 ஆகிய 10 மதிப்புகளின் இடைநிலையளவைக் கண்டறியவும். மேற்கண்ட தரவுகளில் மற்றொரு மதிப்பு 35 சேர்க்கப்பட்டால் புதிய இடைநிலையளவு என்னவாக இருக்கும்?

தீர்வு

n = 10, (இரட்டை எண்

விவரங்களை வரிசைப்படுத்தவும் 23, 25, 28, 33, 36, 39, 45, 45, 54, 56 

இடைநிலை = (n / 2) ஆவது மற்றும்

[ (n / 2) + 1 ] ஆவது உறுப்புகளின் சராசரி

5 வது மற்றும் 6 வது உறுப்புகளின் சராசரி 

= (36 + 39) / 2 

= 75 / 2 

= 37.5 

புதிய மதிப்பு 23, 25, 28, 33, 35, 36, 39, 45, 45, 54, 56 

n = 11 (ஒற்றை எண்

புதிய சராசரி = [ (n + 1) / 2 ] ஆவது உறுப்பு

= [ (11 + 1) / 2 ] ஆவது உறுப்பு

= (12 / 2) ஆவது உறுப்பு

= 6 வது உறுப்பு 

= 36



கொள்குறி வகை வினாக்கள் 


5. a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் 'a' இன் மதிப்பு காண்க

i) 8

ii) 6 

iii) 2

iv) 10 

விடை : iii) 2 


6. தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு ________ 

i) 29

ii) 30 

iii) 34

iv) 32 

விடை : iv) 32 


7. முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு ________ 

i) 6

ii) 7 

iii) 8 

iv) 14 

விடை : i) 6


விடைகள் :

 பயிற்சி 5.3

1. (i) 25 (ii). 11

2. 34

3. 7

4. 37.5 ; 36

 கொள்குறி வகை வினாக்கள் :

5. (iii) 2

6. (iv) 32

7. (i) 6


Tags : Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 5 : Statistics : Exercise 5.3 (Median) Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.3 (இடைநிலை (இடைநிலையளவு)) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்