புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.4 | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

   Posted On :  10.07.2022 04:57 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.4

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள், மேற்சிந்தனைக் கணக்குகள், புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் ,

பயிற்சி 5.4 


பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள் 

1. 15 மதிப்புகளின் கூட்டுச்சராசரி 85 எனக் கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 28 இக்கு பதிலாக 73 என்று தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனில், சரியான சராசரியைக் காண்க

தீர்வு

n = 15, சராசரி = 85


= Σx / n

85 = Σx / 15

Σx = 85 × 15 = 1275 

சரியான Σx = Σx + 28 – 73

= 1275 + 28 - 73 

= 1230

சரியான சராசரி = (சரியான + Σx) / n

= 1230 / 15

= 82


2. 25, 16, 15, 10, 8, 30 இன் இடைநிலையைக் காண்க

தீர்வு

விவரங்களை வரிசைப்படுத்தவும் 8, 10, 15, 16, 25, 30 

n = 6 (இரட்டை எண்)

இடைநிலை = (n / 2)ஆவது 

மற்றும் [ (n / 2) + 1 ] ஆவது உறுப்பின் சராசரி

= 3வது மற்றும் 4வது உறுப்பின் சராசரி

= (15 + 16) / 2

= 31 / 2 

= 15.5


3. 2, 5, 5, 1, 3, 2, 2, 1, 3, 5, 3 இன் முகடைக் காண்க.

தீர்வு

1 ஆனது 2 முறை வருகிறது 

2 ஆனது 3 முறை வருகிறது 

3 ஆனது 3 முறை வருகிறது 

5 ஆனது 3 முறை வருகிறது 

2, 3 மற்றும் 5 ஆனது தலா மூன்று முறை வருகிறது. எனவே 2, 3 முகடு மற்றும்


4. சமூக அறிவியல் தேர்வில் 20 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியையும் இடைநிலையையும் பின்வரும் மதிப்பெண்களுக்குக் காண்க

12, 10, 8, 18, 14, 16. 

தீர்வு

n = 6, (இரட்டை எண்)

i) சராசரி = Σx / n

= 12 + 10 + 8 + 18 + 14 + 16 / 6

= 78 / 6  

x = 13  


ii) விவரங்களை வரிசைப்படுத்தவும்

8, 10, 12, 14, 16, 18 

n = 6 (இரட்டை எண்)

இடைநிலை = (n / 2)ஆவது  உறுப்பு [ (n / 2) + 1 ]ஆவது உறுப்பின் சராசரி.

= 3 ஆவது 4வது உறுப்பின் சராசரி 

= (12 + 14) / 2 

= 26 / 2

இடைநிலை = 13


5. ஒரு கால்பந்து அணி அடித்த கோல்களின் எண்ணிக்கை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 2, 3, 2, 4, 6, 1, 3, 2, 4, 1, 6 இத்தரவுகளுக்கான முகடையும் இடைநிலையையும் காண்க

தீர்வு

விவரங்களை வரிசைப்படுத்தவும் 1, 1, 2, 2, 2, 3, 3, 4, 4, 6, 6 

n = 11 (ஒற்றை எண்)

இடைநிலை = [ (n + 1) / 2 ]ஆவது உறுப்பு

= [ (11 + 1) / 2 ]ஆவது  உறுப்பு

= 6ஆவது உறுப்பு 

= 3 

உறுப்பு = 3 

2 ஆனது மூன்று முறை வருகிறது

எனவே முகடு 2 ஆகும் 


6. 6, 11, 13, 12, 4, 2 இன் சராசரியையும் முகடையும் காண்க

தீர்வு

n = 6

சராசரி = Σx / n

= (6 + 11 + 13 + 12 + 4 + 2) / 6

= 48 / 6

சராசரி = 8

எந்தவொரு எண்ணும் அதிக அளவில் இடம் பெறவில்லை

முகடு இல்லை .



மேற்சிந்தனைக் கணக்குகள் 


7. ஆறு மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 8 ஆகும். மேலும் ஒரு மாணவனின் மதிப்பெண்ணும் சேர்க்கப்பட்டு சராசரி இன்னும் 8 ஆக உள்ளது எனில், சேர்க்கப்பட்ட மாணவனின் மதிப்பெண்ணைக் காண்க.

தீர்வு

n = 6,

= 8

= Σx / n

8 = Σx / 6

Σx = 8 × 6 = 48 

Σx = 48 

புதிய Σx = Σx + மேலும் மாணவரின் சேர்ப்பு 

= 48 + x 

புதிய Σx = 48 + x

n = 7

புதிய சராசரி = புதிய Σx / n

8 = (48 + x) / 7

48 + x = 8 × 7 = 56

x = 56 - 48  

x = 8 


8. பின்வரும் தரவுகளுக்கான சராசரி, முகடு மற்றும் இடைநிலையைக் காண்க

22, 15, 10, 10, 24, 21. 

தீர்வு

n = 6 

i) சராசரி = Σx / n

= (22 + 15 + 10 + 10 + 24 + 21) / 6

= 102 / 6

= 17 

ii) 10 ஆனது 2 முறை வருகிறது எனவே முகடு 10 ஆகும் 

iii) விவரங்களை வரிசைப்படுத்தவும்

10, 10, 15, 21, 22, 24 

n = 6 (இரட்டை எண்)

இடைநிலை = (n / 2)ஆவது மற்றும் [ (n / 2) + 1 ]ஆவது  உறுப்பின் சராசரி

= (15 + 21) / 2

= 36 / 2

= 18

இடைநிலை = 18 


9. கொடுக்கப்பட்டத் தரவுகளின் இடைநிலையைக் காண்க

14, -3, 0, -2, -8, 13, -1, 7. 

தீர்வு

தரவுகளை வரிசைப்படுத்தவும் -8, -3, -2, -1, 0, 7, 13, 14 

n = 8 (இரட்டை எண்)

இடைநிலை = (n / 2)ஆவது மற்றும் [ (n / 2) + 1 ]ஆவது  உறுப்பின் சராசரி

= 4 ஆவது மற்றும் 5 ஆவது உறுப்பின் சராசரி

= (-1 + 0) / 2 = -1 / 2 

= - 0.5


10. முதல் 10 பகா எண்கள் மற்றும் முதல் 10 பகு எண்களின் சராசரியைக் காண்க

தீர்வு

10 பகா எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 

n = 10

சராசரி = Σx / n

= (2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19 + 23 + 29) / 10

= 129 / 10

= 12.9 

10 பகு எண்கள் 

4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18 

n = 10

சராசரி = Σx / n

= (4 + 6 + 8 + 9 + 10 + 12 + 14 + 15 + 16 + 18) / 10

= 112 / 10

= 11.2


விடைகள் :

 பயிற்சி  5.4

1. 82

2. 15.5

3. 2, 3 மற்றும்  5

4. 13;13

5. 2;3

6. 8; முகடு இல்லை 

 மேற்சிந்தனை கணக்குகள் 

7. 8

8. 17; 10 ; 18

9. –0.5

10. 12.9 ; 11.2


Tags : Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 5 : Statistics : Exercise 5.4 Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.4 - புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்