பயட் - சாவர்ட் விதி | இயற்பியல் - மின்னோட்ட வளையம் காந்த இருமுனையாக செயல்படல் | 12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current
மின்னோட்ட வளையம் காந்த இருமுனையாக செயல்படல்
R ஆரம் கொண்ட மின்னோட்டம் பாயும் வட்ட வளையத்தின் அச்சில் அதன் மையத்திலிருந்து z தொலைவிலுள்ள புள்ளியில் உருவாகும் காந்தப்புலம்
வட்ட வளையத்தின் பரப்பு A எனில், A = πR2எனவே சமன்பாடு (3.41) ஐ பரப்பினைப் பொறுத்து எழுதும்போது
சமன்பாடு (3.43) மற்றும் (3.14) ஐ பரிமாணமுறையில் ஒப்பிடும் போது
Pm= I A
இங்கு pm என்பது காந்த இருமுனை திருப்புத் திறனைக் குறிக்கும். வெக்டர் குறியீட்டின்படி
இச்சமன்பாட்டிலிருந்து மின்னோட்டம் பாயும் வளையமானது காந்தத்திருப்புத்திறன் கொண்ட காந்த இருமுனையாக செயல்படும் என அறியலாம்.
எனவே, எந்த ஒரு மின்னோட்ட வளையத்தின் காந்த இருமுனை திருப்புத்திறன் அம்மின்னோட்ட வளையத்தில் பாயும் மின்னோட்டம் மற்றும் மின்னோட்ட வளையத்தின் பரப்பு இவற்றிற்கிடையேயான பெருக்கல் பலனுக்குச் சமமாகும்.
வலதுகை பெருவிரல் விதி
காந்தத்திருப்புத்திறனின் திசையை அறிய நாம் வலதுகை பெருவிரல் விதியைப் பயன்படுத்தலாம்.
இவ்விதியின்படி வளையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் திசையில் வலதுகையின் மற்ற விரல்களால் வளையத்தை சுற்றி பற்றும் போது, நீட்டப்பட பெருவிரல் அம்மின்னோட்ட வளையத்தினால் உருவாகும் காந்தத்திருப்புத்திறனின் திசையைக் கொடுக்கும்.