Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | காந்தவியல் ஓர் அறிமுகம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

இயற்பியல் - காந்தவியல் ஓர் அறிமுகம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | 12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current

   Posted On :  03.10.2022 09:51 pm

12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்

காந்தவியல் ஓர் அறிமுகம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

இயற்பியல் : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: காந்தவியல் ஓர் அறிமுகம்: தீர்க்கப்பட்ட பதில்கள், தீர்வு மற்றும் விளக்கத்துடன்எடுத்துக்காட்டு சிக்கல்கள்

புவிகாந்தப்புலம் மற்றும் புவிகாந்தப்புலக் கூறுகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 3.1

ஒரு குறிப்பிட்ட இடத்தில் புவிக்காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு மற்றும் செங்குத்துக்கூறுகள் முறையே 0.15 G மற்றும் 0.26 G எனில், அந்த இடத்தின் காந்த சரிவுக் கோணம் மற்றும் தொகுபயன் காந்தப்புலம் ஆகியவற்றைக் கணக்கிடுக.

(இங்கு  G-gauss. CGS முறையில்  காந்தப்புலத்தின் அலகு காஸ் ஆகும். 1G = 10-4T)

 

தீர்வு

BH = 0.15 G மற்றும் BV = 0.26 G

tan I = 0.26/0.15  I = tan-1(1.732)=60o

புவியின் தொகுபயன் காந்தப்புலம்


காந்தத்தின் அடிப்படைப் பண்புகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

 

எடுத்துக்காட்டு 3.2

சட்டகாந்தம் ஒன்றின் காந்தத்திருப்புத்திறன்  என்க. அதன் காந்தநீளம் d = 2l. மேலும் அதன் முனைவலிமை qm ஆகும். அச்சட்டகாந்தத்தை

(அ) நீளவாக்கில் இரு சமதுண்டுகளாக வெட்டும் போது

(ஆ) நீளத்திற்கு குறுக்காக இரு சமதுண்டுகளாகவெட்டும் போது அதன் காந்தத்திருப்புத் திறனைக் கணக்கிடுக.

தீர்வு

(அ) சட்டகாந்தத்தை நீளவாக்கில் இருதுண்டுகளாக வெட்டும் போது, 


சட்டகாந்தத்தை நீளவாக்கில் அதன் அச்சின் வழியாக இருசமதுண்டுகளாக வெட்டும்போது,அதன் புதிய காந்தமுனை வலிமை  ஆனால் சட்டகாந்தத்தின் காந்த நீளம் மாறாது. எனவே, காந்தத்திருப்புத்திறன்.


(ஆ) சட்டகாந்தத்தின் அச்சுக்கு செங்குத்தாக இரு சமதுண்டுகளாக வெட்டும் போது:

 

சட்டகாந்தத்தின் அச்சுக்கு செங்குத்தாக இரு சம் துண்டுகளாக வெட்டும்போது அதன் முனைவலிமையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஆனால் காந்த நீளம் பாதியாகக் குறையும். எனவே காந்தத்திருப்புதிறன்


 

எடுத்துக்காட்டு 3.3

வடிவியல் நீளம் 12 cm கொண்ட சீரான சட்ட காந்தம் ஒன்றின் காந்த நீளத்தைக் கண்டறிந்து, காந்த முனைகள் அமைந்திருக்கும் இடத்தைக் குறித்துக் காட்டுக.


தீர்வு

காந்தத்தில் வடிவியல் நீளம் = 12 cm

காந்த நீளம் = 5/6  x(வடிவியல் நீளம்)

= 5/6 x 12 = 10 cm

பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளிகள் காந்தத்தின் முனைகளைக் குறிக்கின்றன.


எடுத்துக்காட்டு 3.4

பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள காந்த இருமுனை (சட்ட காந்தம்) வைக்கப்பட்டுள்ள பரப்பிலிருந்து வெளிவரும் காந்தபாயத்தைக் கணக்கிடுக.


தீர்வு

காந்த இருமுனை வைக்கப்பட்டுள்ள மூடப்பட்டப்பரப்பிலிருந்து (S) வெளிவரும் மொத்த காந்தப்பாயம் சுழியாகும். எனவே,


இங்கு மூடப்பட்ட பரப்பு S முழுவதும் தொகையிடல் செய்யப்படுகிறது. இதன் மதிப்பு எப்போதும் சுழியாகும் ஏனெனில் தனித்த காந்தமுனை (காந்த ஒருமுனை) என்ற ஒன்று இல்லை.


இது நிலைமின்னியலில் கூறப்பட்டுள்ள காஸ்விதியினை ஒத்துள்ளது (அலகு 1 ஐப் பார்க்கவும்).

Tags : Physics இயற்பியல் .
12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current : Introduction to Magnetism: Solved Example Problems Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் : காந்தவியல் ஓர் அறிமுகம்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்