பயட் - சாவர்ட் விதியின் வரையறை மற்றும் விளக்கம்
மின்னோட்டம் பாயும் கடத்தியின் நீளத்தின் சிறு கூறிலிருந்து r தொலைவில் உள்ள P புள்ளியில் படம் 3.30 உருவாகும் காந்தப்புலம் இன் எண்மதிப்பை பயட் மற்றும் சாவர்ட் சோதனையின் அடிப்படையில் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் காந்தப்புலம் இன் எண்மதிப்பு
(i) மின்னோட்டத்தின் (I) வலிமைக்கு நேர்த்தகவிலும்
(ii) நீளக் கூறின் எண்மதிப்புக்கு நேர்த்தகவிலும்
(iii) மற்றும் r^ க்கு இடையே உள்ள கோணத்தின்θசைன் மதிப்புக்கு நேர்த்தகவிலும்
(iv) புள்ளி P மற்றும் நீளக்கூறு இவற்றுக்குஇடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.
இதனை பின்வருமாறு எழுதலாம்
இங்கு k = μo/ 4π(SI அலகில்)
வெக்டர் குறியீட்டின்படி,
இங்கு வெக்டரானது, மின்னோட்டம் பாயும் திசையைக் காட்டும் I மற்றும் யில் இருந்து P புள்ளியை நோக்கிச் செயல்படும் ஓரலகு வெக்டர் r^ ஆகிய இரண்டிற்கும் செங்குத்தாக இருக்கும் (படம் 3.31).
சமன்பாடு (3.34) ஐப் பயன்படுத்தி, கடத்தியின் சிறு நீளக்கூறினால் ஏற்படும் காந்தப்புலத்தை மட்டுமே கணக்கிட இயலும். அனைத்து மின்னோட்டக்கூறுகளின் I பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, மேற்பொருந்துதல் தத்துவத்தைப் பயன்படுத்தி கடத்தியினால், P புள்ளியில் உருவாகும் நிகர காந்தப்புலத்தைக் கண்டறியலாம். எனவே சமன்பாடு (3.34) ஐ தொகைப்படுத்தும்போது
என்று கிடைக்கும். இங்கு முழு மின்னோட்டப்பகிர்விற்கும் தொகைப்படுத்த வேண்டும்.
சிறப்பு நேர்வுகள்
1. புள்ளி P கடத்தியின் மீதே அமைந்தால், θ = 0°.எனவே சுழியாம்.
2. புள்ளி P கடத்திக்கு செங்குத்தாக அமைந்தால்,θ = 90° எனவே பெருமமாகும். மேலும் இதனை பின்வருமாறு எழுதலாம்.
இங்கு n^ என்பது I மற்றும் r^ க்குச் செங்குத்தான ஓரலகு வெக்டராகும்.
குறிப்பு
மின்னோட்டம் ஒரு வெக்டர் அளவல்ல. இது ஒரு ஸ்கேலர்அளவாகும். ஆனால் கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கு திசை உண்டு. எனவே கடத்தியின் சிறு கூறில் பாயும் மின்னோட்டத்தை வெக்டர்- அளவாகக் கருதலாம். அதாவது
மின்புலம் (கூலூம் விதியிலிருந்து) மற்றும் காந்தப்புலத்திற்கு (பயட் - சாவர்ட் விதியிலிருந்து) இடையேயான ஒற்றுமைகள்
• மின்புலம் மற்றும் காந்தப்புலம் ஆகியவை எதிர்த்தகவு இருமடி விதிக்குக் கட்டுப் படுகின்றன. எனவே இவ்விரண்டும் நீண்ட நெடுக்கமுடைய புலங்களாகும் (Long range field).
• மேற்பொருந்துதல்தத்துவத்திற்குக் கட்டுப்படுகின்றன. மேலும் மூலத்தைப் பொருத்து நேர்போக்குத் தன்மை உடையவை. எண்மதிப்பில்,
மின்புலம் (கூலும் விதியிலிருந்து) மற்றும் காந்தப்புலத்திற்கு (பயட் சாவர்ட் விதியிலிருந்து) இடையேயான வேறுபாடுகள்
குறிப்பு
மின்னூட்டம் q வின் (மூலத்தின்) அடுக்கும், மின்புலம் E இன்அடுக்கும் ஒன்றாக இருக்கும். இதே போன்று மின்னோட்டக்கூறு Idl இன் (மூலத்தின்) அடுக்கும் காந்தப்புலம் B இன் அடுக்கும் ஒன்றாக இருப்பதை இங்கு கவனிக்க வேண்டும். வேறுவகையாகக் கூறும்போது மின்புலம் யானது மின்னூட்டத்திற்கு (மூலத்திற்கு) நேர்த்தகவு. ஆனால் மின்னூட்டத்தின் உயர் அடுக்குகளுக்கு (q2, q3, ...) நேர்த்தகவல்ல. இதேபோன்று, காந்தப்புலம் B மின்னோட்டக்கூறு I (மூலத்திற்கு) நேர்த்தகவு. ஆனால் மின்னோட்டக்கூறின் உயர் அடுக்குகளுக்கு நேர்த்தகவல்ல. காரணம் மற்றும் விளைவு இவ்விரண்டும் நேர்ப்போக்குத் தொடர்புடையவைகளாகும்.