பயட் - சாவர்ட் விதி | இயற்பியல் - மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலம் | 12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current
மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும்
காந்தப்புலம்
YY' என்ற ஈறிலா நீண்ட நேர்க்கடத்தியில் படம் 3.32ல் கொடுக்கப்பட்டுள்ளது போல் மின்னோட்டம் I பாய்வதாகக் கருதுவோம். கடத்தியிலிருந்து a தொலைவில் உள்ள புள்ளி Pல் உருவாகும் காந்தப் புலத்தைக் கணக்கிடுவதற்காக dl நீளம் கொண்ட சிறு கூறு (பகுதி AB) ஒன்றைக் கருதுவோம்.
மின்னோட்டக் கூறு Idl-னால் புள்ளி Pல் உருவாகும் காந்தப் புலத்தைக் கணக்கிட பயட் - சாவர்ட் விதியைப் பயன்படுத்துவோம்:
இங்கு n^ என்பது புள்ளி Pல் உள்நோக்கிய திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர், θ என்பது மின்னோட்டக் கூறு Idlக்கும் dl மற்றும் புள்ளி Pஐ இணைக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம். r என்பது Aல் உள்ள கோட்டுப் பகுதிக்கும் புள்ளி Pக்கும் இடைப்பட்ட தொலைவு.
திரிகோணமிதி சமன்பாடுகளைப் பயன்படுத்த A இலிருந்து BPக்கு செங்குத்துக்கோடு ஒன்று வரைக (படம் 3.32)
∆ABCல், sin θ = AC/AB
ஆனால் AB = dl ⇒AC=dl sin θ
AP மற்றும் BPக்கு இடையேயுள்ள கோணம்
AP மற்றும் OPக்கு இடையேயுள்ள கோணம் Ø என்க,
கடத்தி YY'-ஆல் புள்ளி Pல் ஏற்படும் காந்தப்புலம்
ஈறிலா நீளம் கொண்ட கடத்திக்கு
Ø1 = Ø2 900
எடுத்துக்காட்டு 3.13
படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?
தீர்வு
வளையத்தின் மேல் அரைவட்டத்தின் மற்றும் கீழ் அரைவட்டத்தின் வழியே மின்னோட்டம் பாய்வதால் ஏற்படும் காந்தப்புலங்கள் எண்மதிப்பில் சமமாகவும் எதிரெதிர் திசைகளில் செயல்படுவதால், வளையத்தின் மையத்தில் (O புள்ளியில்) நிகர காந்தப்புலம் சுழியாகும்
எடுத்துக்காட்டு 3.14
100 சுற்றுகள் கொண்ட டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் விட்டம் 0.24 m. புவிகாந்தப்புலத்தின் கிடைத்தள கூறின் மதிப்பு 25 X 10-6 T என்ற நிலையில், 600 விலக்கத்தை ஏற்படுத்தும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
தீர்வு
கம்பிச்சுருளின் விட்டம் 0.24 m எனவே அதன் ஆரம் 0.12 m ஆகும். சுற்றுகளின் எண்ணிக்கை 100
புவிகாந்தப்புலத்தின் மதிப்பு = 25 x 10-6 T
விலக்கம்