கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 (தசம எண்களின் கூட்டலும் கழித்தலும்) | 7th Maths : Term 3 Unit 1 : Number System
பயிற்சி 1.2
1. அட்டவணை முறையைப் பயன்படுத்திக் கூட்டுக 0.51 + 0.25
விடை :
0.51 + 0.25 = 0.76
2. இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்திக் கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.
i) 25.8 + 18.53
ii) 17.4 + 23.435
3. அட்டவணை முறையைப் பயன்படுத்தி 0.46 – 0.13 இன் மதிப்பைக் காண்க.
விடை :
0.46 - 0.13 = 0.33
4. இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்திக் கீழ்கண்டவற்றினை கழிக்க.
i) 9.231 இலிருந்து 6.567
ii) 7 இலிருந்து 3.235
5. சுருக்குக : 23.5 – 27.89 + 35.4 - 17.
விடை :
6. சுலைமான் 3.350 கி.கி உருளைக்கிழங்கு, 2.250 கி.கி தக்காளி மற்றும் வெங்காயம் வாங்குகிறார் மொத்தப் பொருட்களின் எடை 10.250 கி.கி எனில், வெங்காயத்தின் எடை எவ்வளவு?
விடை :
உருளைகிழங்கின் எடை = 3.350 கி.கி
தக்காளியின் எடை = 2.250 கி.கி
வெங்காயத்தின் எடை = x
மொத்த எடை = 10.250 கி.கி
3.350 + 2.250 + x = 10.250
5.600 + x = 10.250
x = 10.250 - 5.600
x = 4.650 கி.கி
வெங்காயத்தின் எடை 4.650 கி.கி
7. 0.713 ஐப் பெறுவதற்கு 7.1 இலிருந்து எவ்வளவைக் கழிக்க வேண்டும்?
விடை :
7.1 - × = 0.713
7.1 - 0.713 = x
x = 7.100 - 0.713
x = 6.387
8. 53.7 கிலோமீட்டரை விட 35.6 கி.மீ எவ்வளவு குறைவாக உள்ளது?
விடை :
53.7 - 35.6 = 18.1 கி.மீ
9. அகிலன் வடிவியல் பெட்டியை ₹25.75 இக்கும், பென்சிலை ₹3.75 இக்கும், பேனாவை ₹17.90 இக்கும் வாங்குகிறான். கடைக்காரரிடம் ₹50 ஐக் கொடுக்கிறான் எனில், அவன் திரும்பப் பெறும் தொகை எவ்வளவு?
விடை :
வடிவியல் பெட்டியின் விலை = ₹ 25.75
பென்சிலின் விலை = ₹ 3.75
பேனாவின் விலை = ₹17.90
மொத்த தொகை = 25.75 + 3.75 + 17.90
= ₹47.40
திரும்ப பெறும் தொகை = கொடுத்த தொகை - மொத்த தொகை
= ₹50.00 - 47.40
= ₹ 2.60
10. 3.8 செ.மீ பக்க அளவைக் கொண்ட சமபக்க முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க?
விடை :
பக்கம் a = 3.8 செ.மீ
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = 3a அலகுகள்
= 3 (3.8)
= 11.4 செ.மீ
கொள்குறி வகை வினாக்கள்
11. 1.0 + 0.83 = ?
i) 0.17
ii) 0.71
iii) 1.83
iv) 1.38
விடை : iii) 1.83
12. 7.0 - 2.83 = ?
i) 3.47
ii) 4.17
iii) 7.34
iv) 4.73
விடை : ii) 4.17
13. 3.51 இலிருந்து 1.35 ஐக் கழிக்க
i) 6.21
ii) 4.86
iii) 8.64
iv) 2.16
விடை : iv) 2.16
14. இரு தசம எண்களின் கூடுதல் 4.78. அவற்றில் ஒரு தசம எண் 3.21 எனில் மற்றொரு தசம எண்
i) 1.57
ii) 1.75
iii) 1.59
iv) 1.58
விடை : i) 1.57
15. இரு தசம எண்களின் வேறுபாடு 86.58 அவற்றில் ஓர் எண் 42.31 எனில் மற்றொரு தசம எண்
i) 128.89
ii) 128.69
iii) 128.36
iv) 128.39
விடை : i) 128.89
விடைகள் :
பயிற்சி 1.2
1.
விடை 0.76
2. (i)
(ii)
3.
விடை : 0.33
4. (i)
(ii)
5. 14.01
6. 4.650
7. 6.387
8. 18.1
9. 2.60
10. 11.4 செ.மீ
கொள்குறி வகை வினாக்கள்
11. (iii) 1.83
12. (ii) 4.17
13. (iv) 2.16
14. (i) 1.57
15. (i) 128.89