Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | தசம எண்களை முழுதாக்கல்

எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - தசம எண்களை முழுதாக்கல் | 7th Maths : Term 3 Unit 1 : Number System

   Posted On :  11.07.2022 08:43 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

தசம எண்களை முழுதாக்கல்

பண மதிப்பைத் தோராயப்படுத்தவும், நேரக் கணக்கு முறை, தூரங்களை அளவீடு செய்தல் மற்றும் பல இயற்பியல் அளவீட்டு முறைகளிலும் தசம எண்களை முழுதாக்குதல் பயன்படுகிறது.

தசம எண்களை முழுதாக்கல்

பண மதிப்பைத் தோராயப்படுத்தவும், நேரக் கணக்கு முறை, தூரங்களை அளவீடு செய்தல் மற்றும் பல இயற்பியல் அளவீட்டு முறைகளிலும் தசம எண்களை முழுதாக்குதல் பயன்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

எங்கும் கணிதம் - அன்றாட வாழ்வில் தசம எண்கள்


முழு எண்களை முழுதாக்கும் முறை போன்றே தசம எண்களையும் முழுதாக்க இயலும்.

தசம எண்களை முழுதாக்கும் வழிமுறைகள்

1. முழுதாக்கும் இலக்கத்தினை முதலில் அடிக்கோடிடுக. பின்பு அதற்கு வலதுபுறம் உள்ள இலக்கத்தினைப் பார்க்க.

2. அந்த இலக்கமானது 5 விடக் குறைவாக இருப்பின், அடிக்கோடிட்ட இலக்கம் மாறாது.

3. வலப்புற இலக்கமானது 5 அல்லது 5 விட அதிகமாக இருப்பின் அடிக்கோடிட்ட இலக்கத்துடன் 1ஐக் கூட்ட வேண்டும்.

4. முழுதாக்கியப் பிறகு, அடிக்கோடிட்ட இலக்கத்திற்கு அடுத்துள்ள இலக்கங்களை விட்டுவிட வேண்டும்.


எடுத்துக்காட்டு 1.1  

2.367 அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.

தீர்வு

2.367 இல் முழுதாக்கக்கூடிய இலக்கத்தை அடிக்கோடிடுக: 2.367 அடிக்கோடிட்ட இலக்கத்திற்கு வலதுபுறம் உள்ள இலக்கம் 3, அந்த இலக்கமானது 5 விடக் குறைவு.

ஆகவே, அடிக்கோடிட்ட இலக்கம் 2 ஆகவே இருக்கும்

கீழ்க்காணும் எண் கோட்டினைக் காண்க.


எண்கோட்டில் 2.3 ஆனது 2.0 இக்கு மிக அருகில் உள்ளது. எனவே, 2.367 இக்கு அருகிலான முழு எண் 2 ஆகும்.


எடுத்துக்காட்டு 1.2

99.95 ஐப் பத்தில் ஒன்றாம் இடத்திற்கு முழுதாக்குக

தீர்வு

99.95 இல் முழுதாக்க வேண்டிய இலக்கத்தினை அடிக்கோடிடுக: 99.95

அடிக்கோடிட்ட இலக்கத்திற்கு வலதுபுறம் உள்ள இலக்கம் 5 ஆகும். எனவே, பத்தில் ஒன்றாம் இலக்கத்துடன் (அடிக்கோடிட்ட இலக்கத்துடன்) 1 ஐக் கூட்ட நமக்குக் கிடைக்கும் முழுதாக்கப்பட்ட எண் 100.

கீழ்க்காணும் எண் கோட்டினைப் பார்க்க


எனவே 99.95 முழுதாக்க நமக்குக் கிடைப்பது 100.0 ஆகும்


எடுத்துக்காட்டு 1.3

52.6583 இரு தசம இடத்திருத்தமாக மாற்றுக.

தீர்வு

52.6583 இல் இரு தசம இடத்திருத்தம் என்பது நூறில் ஒன்றாம் இடத்தினைக் (1/100) குறிக்கிறது.

நூறில் ஒன்றாம் இடத்தினை (1/100) அடிக்கோடிடுக: 52.6583.  அடிக்கோடிட்ட இடத்திற்கு வலதுபுறம் இருக்கும் மதிப்பு 8 ஆகும். இது 5 விட அதிகம். எனவே, அடிக்கோடிட்ட இலக்கத்துடன் 1ஐக் கூட்ட நமக்குக் கிடைப்பது 52.66.

எனவே, 52.6583 இன் இரு தசம இடத்திருத்தம் 52.66 ஆகும்.


எடுத்துக்காட்டு 1.4

189.0007 மூன்று தசம இடத்திருத்தமாக மாற்றுக.

தீர்வு :

189.0007 இல் மூன்று தசம இடதிருத்தம் என்பது ஆயிரத்தில் ஒன்றாம் இடத்தினைக் (1/1000)  குறிக்கிறது.

189.0007 இல் ஆயிரத்தில் ஒன்றாம் இடத்தினை அடிக்கோடிடுக: 189.0007.

அடிக்கோடிட்ட ஆயிரத்தில் ஒன்றாம் இலக்கத்திற்கு வலதுபுறம் உள்ள இலக்கம் 7 ஆகும். இது 5 விட அதிகமான மதிப்பாகும்.

எனவே, அடிக்கோடிட்ட இலக்கத்துடன் 1ஐக் கூட்ட வேண்டும். இறுதியில் நமக்குக் கிடைக்கும் மூன்று தசம இடத்திருத்த எண் 189.001 ஆகும்.


இக்காலத்தில், தசம எண்களைப் பெருக்க, வகுக்க கணினி (computer), கணிப்பான் (calculator) மற்றும் அலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால், தசம எண்களைப் பெருக்க அன்று மடக்கை அட்டவணையே (logarithm table) மிகவும் பயன்படுத்தப்பட்டது.



Tags : Number System | Term 3 Chapter 1 | 7th Maths எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 1 : Number System : Rounding of Decimals Number System | Term 3 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : தசம எண்களை முழுதாக்கல் - எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்