எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 1 : Number System
பாடச்சுருக்கம்
• ஒரு தசம எண்ணை முழுமையாக்க,
• முதலில் முழுமையாக்கப்பட வேண்டிய இலக்கத்தை அடிக்கோடிட்டுக் குறிக்க வேண்டும்.
• அந்த இலக்கம் 5 ஐ விடக் குறைவாக இருந்தால், குறித்த இலக்கம் மாறாது.
• அந்த இலக்கம் 5 ஆகவோ, அல்லது 5 ஐ விட அதிகமாகவோ இருந்தால், குறித்த இலக்கத்துடன் 1 ஐக் கூட்டவும்.
• முழுமையாக்கிய பிறகு, குறித்த இலக்கத்திற்கு அடுத்து வரும் அனைத்து இலக்கங்களையும் நீக்குக.
• தசம இலக்கங்களின் வலதுபுறமாகப் பூச்சியங்களைச் சேர்க்க அந்த எண்ணின் மதிப்பு மாறாது.
• தசம எண்களின் தசம இலக்கங்களைச் சமன் செய்யத் தசம இலக்கங்களின் வலப்புறத்தின் இறுதியில் பூச்சியங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்
• இரு தசம எண்களைப் பெருக்கும்போது கிடைக்கும் பெருக்கற்பலனில் உள்ள தசம இலக்கமானது அவ்விரு தசம எண்களிலுள்ள தசம இலக்கங்களின் கூடுதலுக்குச் சமம்.
• ஒரு தசம எண்ணை 10, 100 மற்றும் 1000 ஆல் பெருக்கும்போது தசமப் புள்ளியானது 1 இக்கு அடுத்துள்ள பூச்சியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலதுபுறமாக நகரும்.
• ஒரு தசம எண்ணை 10, 100 மற்றும் 1000 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவில் தசமப் புள்ளியானது 1 இக்கு அடுத்துள்ள பூச்சியத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப இடதுபுறமாக நகரும்.
இணையச் செயல்பாடு
எண்ணியல்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்து அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன் படுத்தி இணையத்திலுள்ள நுழைந்த பின் ஜீயோ ஜீப்ரா என்னு இணையப் பக்கத்தல் “தசம எண்கோடு” என்னும் பணித்தாள் திறக்கும். அப்பணித்தாளில் அளவுகோலைப் பிரிக்க (divide the scale) மற்றும் “மேலும் பிரிக்க” (further divide) என்பதைச் சொடுக்கவும்.
படி 2
கீழ்நோக்கி இருக்கும் அம்புக்குறிகளை நகர்த்திய பின் குறியீட்டுப் பெட்டியைச் சொடுக்கவும். அம்புக்குறிகள் இருக்கும் நிலையின் பின்னங்களையும் தசமங்களையும் காணலாம். கொடுக்கப்பட்ட தசம எண்ணுடன் “ஒன்றைச் சேர்க்க (Add 1 more)” என்பதைச் சொடுக்கிப் பார்க்கவும்.
செயல்பாட்டின் உரலி
தசம எண்கோடு: https://www.geogebra.org/m/f4w7csup#material/nezvwyk6
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.