கூட்டரசு நிதியின் கொள்கைகள் - கூட்டமைப்பு நிதி | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
கூட்டமைப்பு நிதி
கூட்டாட்சி நிதி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் வளங்களை ஒதுக்கீடு குறித்த தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். இது மத்திய மாநில அரசுகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியினை திறமையாக செய்ய வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
* அதிகாரங்கள் பிரிவு: நமது அரசியலமைப்பில், அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே அதன் வரம்புகளை மீறுவதும், மற்றவர்களின் செயல்பாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்த்து அவரவர் சொந்த பொறுப்புகளில் செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்கள் உள்ளன. அவை : மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் இணைப்புப் பட்டியல்.
* மத்திய பட்டியலில் பாதுகாப்பு, ரயில்வே, தபால் மற்றும் தந்தி முதலிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களைக் கொண்டுள்ளது
* மாநில பட்டியலில் பொது நலன், காவல் போன்ற 61 இனங்களைக் கொண்டுள்ளது
* இணைப்புப் பட்டியலில் 52-இனங்கள் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ளது. இதில் மின்சாரம், தொழிற் சங்கம், பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள் போன்றவை உள்ளடங்கும்.
மத்திய, மாநில அரசின் பணபங்களிக்கும் உறவு வருமான வழிகள்
I. மைய அரசின் வருவாய் மூலங்கள்
மைய அரசின் வரி மற்றும் வரியில்லா வருமான வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை.
1. தொழில் நிறுவனங்கள் மீதான வரி
2. பணம், நாணயங்கள் மற்றும் அந்நியச் செலவாணி
3. சுங்க வரி ஏற்றுமதி வரி உட்பட
4. புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களுக்கான கலால் வரி.
5. வேளாண்மை வரி நிலங்கள் தவிர்த்த பண்ணை
6. நீதிமன்றங்கள் விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்.
7. அயல்நாட்டு கடன்கள்.
8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்.
9. தபால் துறையின் சேமிப்பு வங்கி.
10. தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்
11. மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்
12. மத்திய அரசின் பொதுக்கடன்
13. இரயில்வே
14. மாற்றுச் சீட்டுகள், காசோலைகள் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் மீதான வில்லைக் கட்டணம்.
15. இந்திய ரிசர்வ் வங்கி
16. வருமான வரி (வேளாண் வருவாய் தவிர்த்து)
17. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி (தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவசாய நிலம் தவிர)
18. பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
19. செய்திதாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட)
20. இரயில், கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.
II. மாநில வளங்கள்
1. தல வரி.
2. வேளாண் நிலங்கள் மீதான வரி
3. மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி
4. பண்ணை வரி (விவசாய நிலங்கள்)
5. நீதிமன்றங்கள் விதிக்காக மாநில பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
6. நில வருவாய்
7. மத்தியப் பட்டியலில் இல்லாத ஆவணங்களுக்கான வில்லைக் கட்டணம்.
8. வேளாண் வருமான வரி
9. நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
10. கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி.
11. மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி
12. உள்ளுர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருட்களுக்கான நுழைவு வரி.
13. செய்தித்தாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி
14. செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி.
15. சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி
16. வாகன வரி.
17. விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி.
18. வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான தொழில் வரி.
19. பொழுதுபோக்குகள் மற்றும் சூதாட்டங்கள் மீதான வரி.
20. சாலை சுங்க கட்டணம்.
III. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் ( சரத்து 269 -ன் படி)
1. விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துகள் மீதான வரி நிலம்
2. பண்ணை வரி (வேளாண்மை தவிர்த்த )
3. இரயில்வே கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்கள்.
4. பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
5. செய்திதாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட)
6. இரயில், கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.
7. மாநிலங்களுக்கிடையேயான பண்டங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் மீதான வரி (செய்தித்தாள் தவிர)
IV. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது (ஷரத்து 268)
வில்லைகட்டணம் மற்றும் சுங்கவரி மருத்தவ மற்றும் கழிவறை மீதான வரி (மத்திய பட்டியலில் குறிப்பிட்டுள்ளது) இந்திய அரசு விதிக்கும். ஆனால்
(i) யூனியன் பிரதேசங்களில் இந்திய அரசே வசூலிக்கும்.
(ii) மற்ற வகையில், மாநிலங்களே அவைகளை விதிக்கும்.
V. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் ( சரத்து 270 மற்றும் 272 -ன் படி)
1. வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய்.
2. இந்திய அரசின் மத்தியப் பட்டியலில் உள்ள மத்திய கலால் வரி (மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி தவிர்த்த)
வருமான வரியில் நிறுவனங்கள் மீதான வரி உள்ளடக்கப்படவில்லை .
வருமான வரி மாநகராட்சி வரியை உள்ளடக்கியது அல்ல. நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வருமான வரி மத்திய மற்றும் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
1. கூட்டரசு நிதியின் கொள்கைகள்
கூட்டரசு நிதியில் கீழ்க்காணும் முக்கிய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.
1. சுதந்திரம்
2. சமத்துவம்
3. ஒரே மாதிரியான தன்மை
4. போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்
5. நிதி வசதி
6. ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுபடுதல்
7. செயல்திறன்
8. நிர்வாகச் சிக்கனம்
9. பொறுப்பேற்பு
1. சுதந்திரம்
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னனுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் பொருளாவது ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தை கடன் வாங்குவது மற்றும் செலவினை சமாளிப்பது போன்றவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சமத்துவம்
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய் பங்கினை பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
3 ஒரே மாதிரியான தன்மை
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம் வரி செலுத்தல்களை செய்ய வேண்டும். ஆனால் வரி செலுத்தும் திறன் ஒவ்வொரு பகுதிக்கும் சமமாக இல்லாததால் இந்த கொள்கையை பின்பற்றப்பட இயலாது.
4. போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்
போதுமான வளங்களைப் பெற்றிருத்தல் கொள்கை என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், அவற்றின் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் வளங்களைப் பெற்றிருக்க வேண்டும். போதுமான வளம் என்பது தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவையைக் கொண்டு குறிக்கப்படுகிறது. இவை அதிகரித்து வரும் தேவையையும் எதிர்பாராத செலவுகளான போர் மற்றும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க நெகிழ்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும்.
5. நிதி வசதி
கூட்டரசு நிதி முறையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கி கொள்ள முடியும். சுருக்கமாக கூறின், அரசின் பெருகிவரும் பொறுப்புகளுக்கேற்றவாறு வளங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
6. ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல்
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அப்பொழுதுதான் கூட்டரசு முறை பிழைக்கும் இவை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு உதவும்.
7. செயல்திறன்
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து மற்றும் திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். ஏய்ப்பு மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது. ஓர் ஆண்டில் ஒரு முறைக்கு மேல் ஒருவரும் வரி விதிப்பிற்குட்படுத்தக் கூடாது. இரட்டைவரி முறை கூடாது.
8. நிர்வாகச் சிக்கனம்
எந்த ஒரு கூட்டரசு முறைக்கும் சிக்கனம் என்பது முக்கிய பண்பாக உள்ளது. வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்கு செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
9. பொறுப்புணர்வு
நிதிசார் முடிவுகளுக்கு ஒவ்வொரு அரசும் பொறுப்பேற்க வேண்டும். அதாவது மத்திய அரசு பாராளுமன்றத்திற்கும், மாநில அரசு சட்டசபைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.