பொருள், வகைப்பாடு - நிதிப் பொருளியல் - பொது வருவாய் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
பொது வருவாய்
பொது வருவாய் என்பது பொது நிதியியலில் முக்கிய இடம் வகிக்கிறது. மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுச் செலவுகள் உயர்ந்து வருவதால் அதனை பொது வருவாயின் மூலமே சரிசெய்ய முடியும். பொது வருவாயை அதிகரிப்பது என்பது பொதுச் செலவின் அவசியம் மற்றும் மக்களின் செலுத்தும் திறன் அடிப்படையில் அமையும்.
1. பொருள்
பொது வருவாய் அல்லது பொது வருமானம் என்பது அனைத்து மூலங்களின் வழியாக அரசு பெரும் வருமானத்தைக் குறிக்கும்.
டால்டன் கூற்றுப்படி "பொது வருமானம்" என்பதை குறுகிய மற்றும் பரந்த பொருளில் விளக்கப்படுகிறது. பரந்த பொருளில் பொதுவருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அதிகார அமைப்பினர் பெரும் அனைத்து வருவாய் அல்லது கடன் உட்பட உள்ள பெறுதல்களைக் குறிக்கும். குறுகிய கண்ணோட்டத்தில் பொது அதிகார அமைப்பின் வருமான வளங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது. இதனை வருவாய் வளங்கள் எனக் கூறப்படுகிறது.
குழப்பத்தை தவிர்ப்பதற்காக, பரந்த பொருளில் பொதுப் பெறுதல்கள் எனவும், குறுகிய கண்ணோட்டத்தில் பொது வருவாய் எனவும் அழைக்கப்படுகிறது... குறுகிய பொருளில், பொது வருவாய் என்பது அரசின் வருவாய். இது 'வருவாய் சாதனம்' என்றும் பரந்த பொருளில் அரசு கடன் வழியாக பெறுவதும் ஆகும்.
2. பொது வருவாயின் வகைப்பாடு
பொது வருவாய் இருவகையாக வகைப்படுத்தப்படுகிறது..