Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | நிதிக்குழுவின் வரலாறு

பொருளாதாரம் - நிதிக்குழுவின் வரலாறு | 12th Economics : Chapter 9 : Fiscal Economics

   Posted On :  16.03.2022 10:41 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்

நிதிக்குழுவின் வரலாறு

இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280-ன் படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும்.

நிதிக்குழுவின் வரலாறு


* இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280-ன் படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும். இது 1951-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிதி உறவை வரையறுப்பதற்கு அமைக்கப்பட்டது.

* நிதிக்குழு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையின்மையக் குறைப்பதற்கும் (செங்குத்து சமநிலையின்மை) மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சமமின்மையைக் குறைப்பதற்கும் (படுகிடை சமநிலையின்மை) முயல்கிறது. இது உள்ளுணர்வினை ஊக்குவிக்கிறது.

* நிதிக்குழு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக அமைப்பாகும்.

* 14வது நிதிக்குழு 2013-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல்1, 2015 முதல் மார்ச் 2020 வரை செல்லத்தக்கதாகும்.

* 15-வது நிதிக்குழு நவம்பர் 2017-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப் படுத்தப்படும்.


1. இந்திய நிதிக்குழுவின் பணிகள்

ஷரத்து 280(3) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது. இச்ஷரத்தின்படி இக்குழு குடியரசுத் தலைவருக்கு பின்வருவனவற்றை பரிந்துரை செல்கிறது.

1. மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகரவரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து, மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்தளித்தல்.

2. மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கவுள்ள மானிய அளவு பற்றியும் (ஷரத்து 275 (1)) மற்றும் அம்மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்


வரி எவ்வாறு பிரிக்கப்படுகிறது


* இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு - 280 ன் கீழ் நிதிக்குழு  5 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்தப்பட்டு, அது மத்திய மற்றும் மாநில அரசின் வரி பகிர்வை பரிந்துரை செய்யும். 

* 15 - வது நிதிக்குழு மத்திய மற்றும் மாநில அரசின் நிதிப்பகிர்வு சார்ந்த பரிந்துரை 2020 – முதல் நடைமுறைக்கு வரும்.

3. நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ண ம் இந்திய குடியரசு தலைவரால் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய விபரங்கள். ஏனைய பிரச்சனைகளாகிய கடன் நிவாரணம், மாநிலங்களுக்கு வழங்குகிற இயற்கை சீற்றத்திற்கான நிதி, துணை ஆயத்தீர்வைகள் போன்றவைகள்.


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 9 : Fiscal Economics : History of Finance Commission Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல் : நிதிக்குழுவின் வரலாறு - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்