நிதிப் பொருளியல் - பொது நிதியியலின் பாடப் பொருள்/ எல்லை | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
பொது நிதியியலின் பாடப் பொருள்/ எல்லை
பொதுநிதியின் எல்லை
1. பொது வருவாய்
2. பொதுச் செலவு
3. பொதுக் கடன்
4. நிதி நிர்வாகம்
5. நிதிக் கொள்கை
நவீன காலத்தில் பொது நிதியியல் ஐந்து துணைப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், நிதி நிர்வாகம், நிதிக் கொள்கை
1. பொது வருவாய்
பொது வருவாய் என்பது வருவாயைப் பெருக்கக் கூடிய முறைகளான வரி மற்றும் வரியல்லா வருமானங்கள் பற்றியும், வரிக்கொள்கை , வரிவிகிதம், வரியின் பளு, வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது.
2. பொதுச் செலவு
இப்பகுதி அரசின் செலவு, பொதுச் செலவின் விளைவுகள் மற்றும் பொதுச் செலவைக் கட்டுப்படுத்துதல் போன்றவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.
3. பொதுக் கடன்
பொதுக்கடன் என்ற பகுதியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி படிக்கிறது. இதில் பொதுக்கடன்களின் சுமை, அதன் விளைவுகள் மற்றும் திரும்பச் செலுத்தும் முறை பற்றி இத்தலைப்பின் கீழ் வருகிறது.
4. நிதி நிர்வாகம்
இப்பகுதி அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி படிக்கிறது. வரவு செலவு திட்டம் என்பது ஓராண்டிற்கான அரசின் பேரளவு நிதி திட்டமாகும். வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, மதிப்பீடு மற்றும் தணிக்கை போன்றவைகள் நிதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
5. நிதிக் கொள்கை :
வரிகள், மானியங்கள், பொதுக்கடன் மற்றும் பொதுச் செலவு ஆகியவைகள் நிதிக்கொள்கையின் கருவிகளாகும்.