முக்கியத்துவம் | தாவரங்களில் இனப்பெருக்கம் - தாவரங்களில் கருவுறுதல் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
தாவரங்களில்
கருவுறுதல்
· மகரந்தத்தூள், பொருத்தமான
சூலகமுடியை அடைந்ததும் முளைக்கத் தொடங்கும்.
· மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை
உருவாக்குகிறது. அதற்கு மகரந்தக் குழாய் என்று பெயர். இது மகரந்தத் தூளில் உள்ள
மகரந்தத் துளை வழியாக வெளிவருகிறது. மகரந்தத் தூளின் உள்ளிருக்கும் பொருள்கள்
மகரந்தக் குழாய்க்குள் நகர்கின்றன.
· மகரந்தக் குழாய் சூலகமுடி மற்றும் சூலகதண்டில் உள்ள
திசுக்கள் வழியாக வளர்ந்து இறுதியில் சூலகத்தில் உள்ள சூல் துளையை அடைகிறது.
· உடல் செல்லானது அழிந்து விடுகிறது. உற்பத்தி
செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை (விந்தணு) உருவாக்குகிறது.
· மகரந்தக் குழாயின் முனை வெடித்து இரண்டு ஆண்
இனச்செல்லும் சூல்பையை அடைகின்றது.
· ஓர் ஆண் இனச்செல் (விந்தணு) அண்டத்துடன் இணைந்து
(சின்கேமி) இரட்டைமய சைகோட்டைத் தோற்றுவிக்கிறது. மற்றோர் ஆணின செல் இரட்டைமய
உட்கருவுடன் இணைந்து முதன்மைக் கருவூண் உட்கருவைத் தோற்றுவிக்கிறது. இது மும்மய
உட்கரு ஆகும். இங்கு இரண்டு இணைவுகள் - (i) சின்கேமி (ii)
மூவிணைவு நடைபெறுவதால் இது இரட்டைக் கருவுறுதல்
எனப்படுகிறது.
· மூவிணைவுக்குப் பின்னர் முதன்மைக் கருவூண் உட்கரு,
கருவூணாக மாறுகிறது.
· கருவூண், உருவாகும் கருவிற்கு
ஊட்டமளிக்கிறது.
· சினையாற்றியம் (சினர்ஜிட்) மற்றும் பக்கவாட்டு
செல்கள் அழிந்து விடுகின்றன.
· சூற்பையைத் தூண்டி, கனியை
உருவாக்குகிறது.
· புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.
· சூலானது விதையாக மாறுகிறது.
· சூலுறை, விதையுறையாக மாற்றம் அடைகிறது.
· சூல் பை பெரியதாகி, கனியாக
மாறுகிறது.
விதையானது வருங்காலத்
தாவரத்தை உள்ளடக்கியுள்ளது. பின்பு இது தகுந்த சூழ்நிலையை அடையும் போது தாவரமாக
வளர்கிறது.