கருத்தடை - மக்கள்தொகை வெடிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
மக்கள்தொகை
வெடிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு
மக்கள்தொகையின்
எண்ணிக்கையிலும், அளவிலும் திடீரென ஏற்படக்கூடிய அதிகரிப்பு
மக்கள்தொகை வெடிப்பு எனப்படும். மக்கள் தொகை உயர்வின் உள்ளார்ந்த ஆபத்துக்களை
உணர்ந்த இந்திய அரசு, மக்கள்தொகை உயர்வினைக்
கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் குடும்ப கட்டுப்பாடு
மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய குடும்ப நலத்திட்டமானது
இந்தியாவில்
1952-ல்
உருவாக்கப்பட்டது. உலக அளவில் குடும்ப நலத்திட்டத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக
இந்தியாவும் திகழ்கிறது.
குடும்பம் மற்றும் சமுதாய
நலன் கருதி, பொறுப்புணர்வின் அடிப்படையில் இளம் தம்பதியர் தாமாகவே முன்வந்து குடும்பக்
கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளுதல் குடும்பநலத் திட்டமாகும். உலகளாவிய நலம்
சார்ந்த அளவுகோலாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் திகழ்வதால் உலக சுகாதார
அமைப்பும் இதனை வலியுறுத்துகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
தலைகீழான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு இந்தியாவில் குடும்ப நல மேம்பாட்டிற்கான
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. இது குறிப்பாக அனைத்து
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப
நல மையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படுவோருக்கு குடும்பக்
கட்டுப்பாடு தொடர்பாக உதவி மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. "சிறு
குடும்பமே சீரான வாழ்வு" என்ற வாசகத்துடன் இந்த தலைகீழான சிவப்பு
முக்கோண குறியீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1. கருத்தடை
குழந்தை
பிறப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறை கருத்தடையாகும். பெண்களில் கருவுறுதலைத்
தடுக்க மேம்படுத்தப்பட்ட நுட்பங்கள் அல்லது முறைகள் கையாளப்படுகின்றன.
கருத்தடைக்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் கருத்தடை சாதனங்கள் எனப்படும்.
கருத்தரித்தலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான கருத்தடை முறைகள் பற்றி இங்கே
விளக்கப்பட்டுள்ளது.
1. தடுப்பு
முறைகள்
2. ஹார்மோன்
முறைகள்
3. கருப்பையினுள்
பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் (IUDs)
4. அறுவை
சிகிச்சை முறைகள்
இம்முறையானது விந்துவும்
அண்டமும் ஒன்று சேர்தலைத் தடுக்கிறது. இத்தடுப்பு முறையால் விந்துவானது பெண்ணின்
கலவிக் கால்வாயினுள் நுழைதல் தடுக்கப்படும்.
அ) குறியுறை (Condom)
இதனை ஆண்கள்
பயன்படுத்துவதால் விந்தணுக்கள் பெண்களின் கலவிக் கால்வாயினுள் கொட்டப்படுவது
தவிர்க்கப்படுகிறது. இவ்வுறைகள் லேட்டக்ஸ் அல்லது பிளாஸ்டிக் கொண்டு
தயாரிக்கப்படுகிறது. பாலியல் தொடர்பினால் உண்டாகும் நோய்களான (STD) சிபிலிஸ்
மற்றும் எய்ட்ஸ் நோய்களிலிருந்தும், குறியுறை பாதுகாப்பு
அளிக்கிறது.
ஆ) பெண்ணுறை அல்லது கருத்தடை திரைச்சவ்வு
கலவிக் கால்வாய் அல்லது
கருப்பை நுழைவாயில் பொருத்தப்படும் சாதனம் பெண்ணுறை அல்லது கருத்தடை திரைச்சவ்வு
எனப்படுகிறது. இவை விந்தணுக்கள் கருப்பையினுள் நுழைவதைத் தடுக்கின்றன.
ஹார்மோன்கள், மாத்திரைகள் மற்றும் மருந்துகள் (கருப்பை மருந்துகள்) ஆகிய வகைகளில் கிடைக்கிறது.
இந்த ஹார்மோன்களால் அண்டகத்திலிருந்து முட்டை வெளியேறுதல் தடுக்கப்படுகிறது (அண்ட விடுபடுதலுடன் தொடர்புடையது).
இவை கருப்பையினுள்
பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களாகும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இரண்டு
சாதனங்கள் லிப்பிஸ் லூப் மற்றும் காப்பர்-டி ஆகும். இவை தாமிரம் மற்றும்
பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படுகிறது (உறுத்துதல் ஏற்படுத்தாதவை). இவை
கருப்பையினுள் பொருத்தப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகள் வரை இருக்கும். இது விந்து செல்களால்
முட்டை கருவுறும் தன்மையைத் தடுப்பதனால் கரு பதித்தல் தடுக்கப்படுகிறது. முதல்
கருவுறுதலுக்கும் அடுத்த கருவுறுதலுக்கும் இடையே போதுமான இடைவெளியையும்
ஏற்படுத்துகிறது.
கருத்தடை அறுவை சிகிச்சை
அல்லது மலடாக்குதல் என்பது ஒரு நிலையான கருத்தடை முறையாகும். ஆண்களில் வாசெக்டமி
(விந்து நாளத் துண்டிப்பு) மற்றும் பெண்களில் டியூபெக்டமி (அண்டநாளத்
துண்டிப்பு) முறையில் கருத்தடை செய்யப்படுகிறது. இவை நிரந்தர குழந்தை பிறப்பு
கட்டுப்பாட்டு முறைகளாகும்.