தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
தாவரங்கள்
மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் (அறிவியல்)
நினைவில்
கொள்க
• பாக்டீரியாக்கள் மற்றும்
புரோட்டோசோவன்கள் பிளத்தல் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேய் செல்களை
உருவாக்குகிறது.
• ஹைட்ரா போன்ற உயிரிகள்
இழப்பு மீட்டல் முறையில் துண்டு துண்டாக வெட்டினாலும் புதிய உயிரிகளை உருவாக்கும்.
அவை மொட்டுக்களை உருவாக்கி அதன் மூலமும் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன.
• தாவரங்களில் நடைபெறும்
பாலினப் பெருக்கத்தின் முதல் படிநிலையான மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்தத்தூளானது
மகரந்தப்பையிலிருந்து சூல்முடியைச் சென்றடைவதாகும். இதனைத் தொடர்ந்து கருவுறுதல்
நடைபெறுகிறது.
• பால் இனப்பெருக்கம் என்பது
இரண்டு ஒற்றைமய இனச்செல்கள் ஒன்றிணைந்து ஒரு இரட்டைமய உயிரினத்தை (கருவுற்ற முட்டை
- சைகோட்) உருவாக்குவது.
• ஆண்களில் விந்துவும், பெண்களில்
அண்டமும் உருவாகும் நிகழ்வு இனச்செல் உருவாக்கம் என்றழைக்கப்படுகிறது. இது
விந்தணுவாக்கம் மற்றும் அண்டவணுவாக்கத்தை உள்ளடக்கியது.
• பெண்களின் வாழ்வில், இனப்பெருக்க
காலத்தில் நிகழும் சுழற்சி முறையிலான கால ஒழுங்கு மாற்றமே மாதவிடாய் சுழற்சி
எனப்படும்.
• பிளாஸ்டோசிஸ்ட்
கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதித்து வைக்கப்படும் நிகழ்வு பதித்தல்
எனப்படும்.
• தாய் சேய் இணைப்புத்
திசுவானது வளரும் கருவிற்கும், தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை
ஏற்படுத்துகிறது.
• தாயின் கருப்பையிலிருந்து
சேயானது வெளிவரும் நிகழ்வு குழந்தை பிறப்பு எனப்படும்.
• கருத்தடை அறுவை சிகிச்சை
அல்லது மலடாக்குதல் என்பது ஒரு நிலையான கருத்தடை முறையாகும். ஆண்களில் வாசெக்டமி
மற்றும் பெண்களில் டியூபெக்டமி முறையில் கருத்தடை செய்யப்படுகிறது. இவைகள் நிரந்தர
குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளாகும்.