இனப்பெருக்க
சுகாதாரம்
உலக சுகாதார அமைப்பின்படி, இனப்பெருக்க
ஆரோக்கியம் என்பது இனப்பெருக்கத்திறன், கர்ப்பகால
ஒழுங்குபாடு, கருவுறுதல், பாதுகாப்பான
குழந்தை பிறப்பு மற்றும் தாய் மற்றும் சேய் உயிர் வாழ்வதற்கான அனைத்து
அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.
மக்களின் இனப்பெருக்க
சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய சுகாதார
திட்டத்தின் நடவடிக்கைகளாவன
i. தேசிய
குடும்ப நலத் திட்டம்
ii. இனப்பெருக்கம்
மற்றும் குழந்தை நலம் பேணுதல்
தேசிய குடும்ப நலத்திட்டம்
பின்வரும் பலவற்றை உள்ளடக்கிய இணைப்புத் திட்டமாகும்.
1. தாய்
சேய் நலம் பேணுதல்
2. தாய்,
சேய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தடைகாப்பு ஏற்படுத்துதல்
3. கருவுற்ற
பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் முறையான உணவூட்டம்
4. கருத்தடை
சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கான கல்வியறிவு
இவற்றின் ஒருங்கிணைந்த
செயல்பாடுகளாவன
· கருவுறுதல் மற்றும் பாதுகாப்பான குழந்தை பிறப்பு
· குழந்தை பிறப்பிற்குப் பின் தாய் சேய் நலம் பேணுதல்
· தாய்ப்பாலூட்டுதலின் முக்கியத்துவம்
· இனப்பெருக்க கால்வாயில் ஏற்படும் நோய்த் தொற்று
மற்றும் பாலியல் தொடர்பான நோய்களுக்கான தடுப்பு முறைகள்