Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | மகரந்தச்சேர்க்கை

முக்கியத்துவம், வகைகள், நன்மைகள், தீமைகள் - மகரந்தச்சேர்க்கை | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals

   Posted On :  31.07.2022 03:20 am

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

மகரந்தச்சேர்க்கை

பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

மகரந்தச்சேர்க்கை

பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

மகரந்தச் சேர்க்கையின் பயன்கள்

1. மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன.

2. அயல் மகரந்தச் சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது.

 

1. மகரந்தச்சேர்க்கையின் வகைகள்

1. தன் மகரந்தச் சேர்க்கை

2. அயல் மகரந்தச் சேர்க்கை

 

தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி)

ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

எ.கா. ஹைபிஸ்கஸ்

தன் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்

1. இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

2. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

3. மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை

தன் மகரந்தச் சேர்க்கையின் தீமைகள்

1. விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.

2. கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.

3. புதிய வகைத் தாவரம் உருவாகாது.

 

அயல் மகரந்தச் சேர்க்கை

ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

எ.கா. ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.

செயல்பாடு 3

தோட்டத்தில் உள்ள மலர்களை உற்று நோக்கி அவற்றில் எந்த வகை மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது என்பதைப் பதிவு செய்யுங்கள்.

எந்தத் தாவரத்தில் எந்த வகையான பூச்சி அல்லது பறவை மகரந்தச்சேர்க்கையை ஏற்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்யுங்கள்.

அயல் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்

1. அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.

2. நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.

அயல் மகரந்தச் சேர்க்கையின் தீமைகள்

1. அயல் மகரந்தச் சேர்க்கை, புறக்காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது.

2. அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.

3. சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.

4. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.

 

Tags : Importance, Types, Advantages, Disadvantages முக்கியத்துவம், வகைகள், நன்மைகள், தீமைகள்.
10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals : Pollination Importance, Types, Advantages, Disadvantages in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் : மகரந்தச்சேர்க்கை - முக்கியத்துவம், வகைகள், நன்மைகள், தீமைகள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்