Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | கணித தர்க்கவியல் (Mathematical Logic) : தர்க்க இணைப்புகள் மற்றும் அதன் மெய்மை அட்டவணைகள் (Logical Connectives and their Truth Tables)

தனிநிலைக் கணிதம் | கணிதவியல் - கணித தர்க்கவியல் (Mathematical Logic) : தர்க்க இணைப்புகள் மற்றும் அதன் மெய்மை அட்டவணைகள் (Logical Connectives and their Truth Tables) | 12th Maths : UNIT 12 : Discrete Mathematics

   Posted On :  11.11.2022 06:32 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்

கணித தர்க்கவியல் (Mathematical Logic) : தர்க்க இணைப்புகள் மற்றும் அதன் மெய்மை அட்டவணைகள் (Logical Connectives and their Truth Tables)

(1) அல்ல NOT [¬ ] என்பதற்குரிய மறுப்பின் மெய்மை அட்டவணை (2) மற்றும் AND [Λ] என்பதற்குரிய இணையலின் மெய்மை அட்டவணை (3) அல்லது OR [v] என்பதற்குரிய பிரிப்பிணைவின் மெய்மை அட்டவணை

கணித தர்க்கவியல் (Mathematical Logic)

தர்க்க இணைப்புகள் மற்றும் அதன் மெய்மை அட்டவணைகள் (Logical Connectives and their Truth Tables) 

(1) அல்ல NOT [¬ ] என்பதற்குரிய மறுப்பின் மெய்மை அட்டவணை


 (2) மற்றும் AND [Λ] என்பதற்குரிய இணையலின் மெய்மை அட்டவணை


 (3) அல்லது OR [v] என்பதற்குரிய பிரிப்பிணைவின் மெய்மை அட்டவணை



எடுத்துக்காட்டு 12.12

p 'குளிராக இருக்கிறது', q:. 'மழை பெய்கிறது' என்ற கூற்றுகளுக்கு ¬ p, p  q , p∨q மற்றும் q  ¬p, ஆகிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க (எழுதுக). 

தீர்வு

(1) ¬pகுளிராக இல்லை 

(2)  qகுளிராக இருக்கிறது மற்றும் மழை பெய்கிறது 

(3)  q :  குளிராக இருக்கிறது அல்லது மழை பெய்கிறது 

(4)  ¬ மழை பெய்கிறது அல்லது குளிராக இல்லை

¬p என்ற கூற்றில் ஒரே ஒரு தனிக்கூற்று p மட்டும் உள்ளதால் அதற்குரிய மெய்மை அட்டவணையில் 2 = (21) நிரைகள் இருக்கும். p q மற்றும் p   q என்கிற கூட்டுக் கூற்றுகள், p மற்றும் q ஆகிய இரண்டு தனிக் கூற்றுகளைப் பெற்றுள்ளது. எனவே அவைகளுக்குரிய மெய்மை அட்டவணைகளில் 4 = (22) நிரைகள் இருக்கும். எனவே, இதேபோல் ஒரு கூட்டுக் கூற்றில் வெவ்வேறான உள் கூற்றுகள் இடம்பெறின் மெய்மை அட்டவணையானது 2n நிரைகளைக் கொண்டிருக்கும்


எடுத்துக்காட்டு 12.13 

பின்வரும் கூற்றின் வாய்ப்பாடுகளுக்கு எத்தனை நிரைகள் தேவைப்படும்?

(i) p ∨ ¬t ∧ ( p ∨ ¬s ) (ii) ( ( p ∧ q ) ∨ ( ¬r ∨ ¬s )) ∧ ( ¬t ∧ v)

 தீர்வு 

(i) ( p  ¬t )  ( p  ¬s ) என்ற கூற்றில் p,s, t என்ற மாறிகள் அதாவது 3 உள் கூற்றுகள்

இடம்பெறுகின்றன. எனவே, இதன் மெய்மை அட்டவணையில் 23 = 8 நிரைகள்இடம்பெறும

(ii) ( ( p  q ( ¬ r  ¬ s ))  ( ¬ t  v) என்ற கூற்றில் p,q,r,s, t , v என்ற 6 மாறிகள் இடம் பெறுவதால் அதன் மெய்மை அட்டவணையில் 26 = 64 நிரைகள் இடம்பெறும


நிபந்தனைக் கூற்று

வரையறை 12.13

p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளின் நிபந்தனைக் கூற்றானது, “p எனில் q” என்ற கூற்றைக் குறிக்கும். இதை p → q எனக் குறிப்பிடுவர். இங்கு p ஐக் கருதுகோள் அல்லது முன்உதாரணம் என்றும் q முடிவு அல்லது விளைவு என்றும் அழைப்பார்கள். p-ன் மெய் மதிப்பு உண்மையாக இருந்து q -ன் மெய்மதிப்பு தவறாக இருப்பின் p → q -ன் மெய் மதிப்பு தவறாகும். அவ்வாறில்லை எனில் அது உண்மையாகும்.

p → q -ன் மெய்மை அட்டவணை



எடுத்துக்காட்டு 12.14

இன்று திங்கள் எனில், பிறகு 4 + 4 = 8, என்பதனை p → q -ஆகக் கருதுக, இங்கு உள்கூற்றுகள் p மற்றும் q பின்வருமாறு கொடுக்கப்படுகிறது.

 p: இன்று திங்கள் கிழமை, q: 4 + 4 = 8. 

q -ன் முடிவானது T என்பதால் p → q -ன் மெய்மதிப்பு T ஆகிறது.

ஒரு முக்கியமான கருத்து என்னவென்றால் p மற்றும் q-ன் வாக்கியங்களின் அர்த்தங்களை கருத்தில் கொண்டு p → q செயல்படுத்தக்கூடாது. மேலும் p என்பது qவுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

விளைவுகள்

p → q என்ற நிபந்தனைக் கூற்றிலிருந்து மேலும் மூன்று நிபந்தனைக் கூற்றுகள் வருவிக்கப்படுகின்றன. அவைகள் கீழே பட்டியலிடப்படுகிறது.

(i) மறுதலைக் கூற்று (Converse statement) q → p 

(ii) எதிர்ம றைக் கூற்று (Inverse statement) ¬ p →¬q . 

(iii) நேர்மாறுக் கூற்று (Contrapositive statement) ¬ q →¬p .


எடுத்துக்காட்டு 12.15

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக. (i) நிபந்தனைக் கூற்று (ii) மறுதலைக் கூற்று (iii) எதிர்மறைக் கூற்று (iv) நேர்மாறுக் கூற்று 

p: பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது

q: ஊட்டி கேரளாவில் உள்ளது 

தீர்வு :

p மற்றும் q சம்பந்தப்பட்ட நான்கு விதமான நிபந்தனைக் கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

(i) p → q: (நிபந்தனைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது எனில் பின்னர் ஊட்டி கேரளாவில் உள்ளது

(ii) q → p - (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது” 

(iii) ¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை

(iv) ¬ q → ¬p  (நேர்மாறுக் கூற்று) “ஊட்டி கேரளாவில் இல்லை எனில், பின்னர் பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல"


இரு நிபந்தனைக் கூற்று

வரையறை 12.14

p மற்றும் q என்ற ஏதேனும் இரு கூற்றுகளின் இரு நிபந்தனைக் கூற்றுp இருந்தால் இருந்தால் மட்டுமே q” என்ற கூற்றாகும். இதனை p ↔  q எனக் குறிப்பிடுவர். p மற்றும் q-க்கு ஒரே மாதிரியான மெய் மதிப்புகள் இருந்தால் மட்டுமே p ↔ q -ன் மெய்மதிப்பு T ஆகும். அவ்வாறில்லை எனில், அது F ஆகும்.

p ↔ q-ன் மெய்மை அட்டவணை 



விலக்கி வைத்தல் (Exclusive OR (EOR)[]) (OR (XOR)) 

வரையறை 12.15

p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகள் என்க. p EOR q என்பது ஒரு கூட்டுக் கூற்று ஆகும். இதன் மெய்மதிப்பை p அல்லது q சரியாக இருக்கையில் 'சரி' என்றும் அவ்வாறு இல்லையேல் 'தவறு' என்றும் தீர்மானிக்கப்படும். p q என இது குறிக்கப்படும். p அல்லது q -ன் மெய் மதிப்பு T எனும்பொழுது pq -ன் மெய்மதிப்பு T ஆகும். அவ்வாறில்லை எனில், அது F ஆகும். pq -ன் மெய்மை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

pq-ன் மெய்மை அட்டவணை



எடுத்துக்காட்டு 12.16

(pq) Λ (p⊽¬q)-ன் மெய்மை அட்டவணையைத் தருக.


மேற்காணும் முடிவை மெய்மை அட்டவணைகளை பயன்படுத்தாமல் நிரூபிக்க முடியும். இதனைத் தர்க்க சமானமானவை பற்றி அறிந்த பிறகே வழங்க முடியும்.


Tags : Discrete Mathematics | Mathematics தனிநிலைக் கணிதம் | கணிதவியல்.
12th Maths : UNIT 12 : Discrete Mathematics : Mathematical Logic: Logical Connectives and their Truth Tables Discrete Mathematics | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம் : கணித தர்க்கவியல் (Mathematical Logic) : தர்க்க இணைப்புகள் மற்றும் அதன் மெய்மை அட்டவணைகள் (Logical Connectives and their Truth Tables) - தனிநிலைக் கணிதம் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்