Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | தர்க்கசமானத் தன்மை (Logical Equivalence)

தனிநிலைக் கணிதம் | கணிதவியல் - தர்க்கசமானத் தன்மை (Logical Equivalence) | 12th Maths : UNIT 12 : Discrete Mathematics

   Posted On :  11.11.2022 06:33 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்

தர்க்கசமானத் தன்மை (Logical Equivalence)

A மற்றும் B என்கிற இரண்டு கூட்டுக் கூற்றுகளின் மெய்மை அட்டவணைகளின் கடைசி நிரல்கள் ஒரே மாதிரியான மெய் மதிப்புகளைப் பெற்றிருப்பின் அவை தர்க்க சமானமானவை எனப்படும். இதனை A = B அல்லது A ⇔ B என்ற குறியீட்டால் குறிப்பிடுவர்.
கணித தர்க்கவியல் (Mathematical Logic)

தர்க்கசமானத் தன்மை (Logical Equivalence)

வரையறை 12.20

A மற்றும் B என்கிற இரண்டு கூட்டுக் கூற்றுகளின் மெய்மை அட்டவணைகளின் கடைசி நிரல்கள் ஒரே மாதிரியான மெய் மதிப்புகளைப் பெற்றிருப்பின் அவை தர்க்க சமானமானவை எனப்படும். இதனை A = B அல்லது A B என்ற குறியீட்டால் குறிப்பிடுவர்.

மேற்கண்ட வரையறையிலிருந்து A -ம் B -ம் தர்க்க சமானமானவை எனில் A B கண்டிப்பாக ஒரு மெய்மம் என்பது தெளிவாகிறது.


சமானமானவைகளின் சில விதிகள் 


1. தன்னடக்க விதிகள் 

(i)  p  p

(ii)  p  p .

நிரூபணம்


மேற்கண்ட மெய்மை அட்டவணையில் p,  p மற்றும் p  p ஆகியவைகள் ஒரே மெய் மதிப்புகளைப் பெற்றுள்ளது. எனவே,  p  p மற்றும் p  p  p  


2. பரிமாற்று விதிகள்

(i) p  q ≡ q  p

(ii) p  q ≡ q  p .

நிரூபணம்


p  q  மற்றும் q  p களின் மெய் மதிப்புகள் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே, p  q ≡ q  p. இதேபோல, (ii) p  q ≡ q  p  என நிரூபிக்கலாம்.


3. சேர்ப்பு விதிகள்

(i) p  ( q  r ) ≡ ( p  q )  r 

(ii) p  ( q  r ) ≡ ( p  q )  r . 

நிரூபணம் (i) 

சேர்ப்பு விதியை நிரூபிக்க ஏதுவாக மெய்மை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது


மெய்மை அட்டவணையில் p  q )  r மற்றும் p  ( q  r ) ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன.

எனவே, p  ( q  r ) ≡ ( p  q )  r . 

இதேபோல, (ii)  ( q  r )  ( p  q )  r  என நிரூபிக்க முடியும்.


4. பங்கீட்டு விதிகள்

(i) p v (qr) (pvq) (p v r)

 (ii) p (q v r) (pq) v (pr)

 நிரூபணம் (i)


மெய்மை அட்டவணையில் p  ( q  r) மற்றும் p  q )  ( p  r) ஆகியவற்றிற்கான நிரல்கள்ஒரே மாதிரியாக உள்ள . எனவே,  ( q  r )  ( p  q )  ( p  r) . 

இதேபோல, (ii) p  ( q  r ) ≡ ( p  q )  ( p  r) என நிரூபிக்க முடியும்.


5. சமனி விதிகள்

(i) p  ≡ T மற்றும் p  ≡ p 

(ii) p   p மற்றும் p  F ≡ F 

நிரூபணம்


(i) மெய்மை அட்டவணையில்  p   மற்றும் T ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரேமாதிரியுள்ளதால் அவை இரண்டும் தர்க்க சமானமானவை. p   மற்றும் p ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியுள்ளதால் அவை இரண்டும்தர்க்க சமானமானவை

(ii) p   p மற்றும் p  F ≡ F என நிரூபிக்கமுடியும்.


6. நிரப்பு விதிகள்

(i) p  ¬ p ≡ T  மற்றும் p  ¬ p ≡ F 

(ii) ¬T ≡ F மற்றும் ¬F ≡ T

நிரூபணம்


 (i) மெய்மை அட்டவணையில் p  ¬ p மற்றும் T தொடர்பான நிரல்கள் ஒரே மாதிரியுள்ளதால்அவை தர்க்க சமானமானவை ஆகும். p  ¬ p மற்றும் F தொடர்பான நிரல்கள் ஒரேமாதிரியுள்ளதால் அவை தர்க்க சமானமானவை ஆகும்

(ii) மெய்மை அட்டவணையில் ¬T மற்றும் F தொடர்பான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளது.எனவே அவை தர்க்க சமானமானவை ஆகும். இதேபோன்று ¬F மற்றும் T தொடர்பான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே, அவை தர்க்க சமானமானவை ஆகும்.


7. உட்சுழற்சி விதி அல்லது இரட்டை மறுப்பு விதி

¬(¬ p) ≡ p 

நிரூபணம்


மெய்மை அட்டவணையில் ¬ ( ¬p) மற்றும் p -ன் நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே அவை சமானமானவை ஆகும்.


8. டீ மார்கனின் விதிகள்

(i) ¬ ( p  q) ≡ ¬ p  ¬q

(ii) ¬ ( p  q) ≡ ¬p  ¬q

நிரூபணம்


மெய்மை அட்டவணையில் ¬ ( p  q ) மற்றும் ¬ p  ¬q ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை. ¬ ( p  q) ≡ ¬ p  ¬q . இருமையாக (ii) ¬ ( p  q) ≡ ¬p  ¬q என்பதை நிரூபிக்க முடியும்


9. ஈர்ப்பு விதிகள்

(i) p  ( p  q ) ≡ p

(ii) p  ( p  q ) ≡ p

நிரூபணம் 


(i) மெய்மை அட்டவணையில் p  ( p  q ) மற்றும் p ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும்ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை

(ii) மெய்மை அட்டவணையில் p  ( p  q ) மற்றும் p ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும்ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை


எடுத்துக்காட்டு 12.17

p → q ≡ ¬ p  q -க்கு சமானமானவை பண்பை நிறுவுக.

தீர்வு


மெய்மை அட்டவணையில் p → q மற்றும் ≡ ¬ p  q ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே அவை சமானமானவை ஆகும்.


எடுத்துக்காட்டு 12.18 

இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து

 p ↔ q ≡ ( p → q )  (q → p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.

தீர்வு


மெய்மை அட்டவணையில் p ↔ q  மற்றும் p → q )  (q → p) ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை.


எடுத்துக்காட்டு 12.19

சமானமானவை பண்புகளைப் பயன்படுத்தி p ↔ q ≡ ( p  q )  ( ¬ p ∧ ¬q) . எனக் காட்டுக.

தீர்வு 

இக்கொள்கையை எடுத்துக்காட்டுகள் 12.17 மற்றும் 12.18ஐப் பயன்படுத்தி தருவிக்க முடியும்

p ↔ q ≡ ( ¬ p ∨ q) ∧ ( ¬q ∨ p) ... (1) ≡ (¬ p ∨ q) ∧ ( p ∨ ¬ q) (பரிமாற்றுப் பண்பின்படி) …(2) ≡ ( ¬ p ∧ ( p ∨ ¬q )) ∨ ( q ∧ ( p ∨ ¬q)) (பங்கீட்டுப் பண்பின்படி) ≡ ( ¬ p ∧ p) ∨ ( ¬p ∧ ¬q) ∨ ( q ∧ p) ∨ ( q ∧ ¬q) (பங்கீட்டுப் பண்பின்படி) ≡ F ∨ ( ¬p ∧ ¬q) ∨ ( q ∧ p) ∨ F; (நிரப்பு விதிப்படி) ≡ ( ¬ p ∧ ¬ q ) ∨ ( q ∧ p) ; (சமனி விதிப்படி) ≡ ( p ∧ q ) ∨(¬ ∧ p ¬q) ; (பரிமாற்று விதிப்படி) இறுதியாக, p ↔ q ≡ ( p ∧ q ) ∨(¬ p∧ ¬q) .


Tags : Mathematical Logic | Discrete Mathematics | Mathematics தனிநிலைக் கணிதம் | கணிதவியல்.
12th Maths : UNIT 12 : Discrete Mathematics : Some Laws of Logical Equivalence Mathematical Logic | Discrete Mathematics | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம் : தர்க்கசமானத் தன்மை (Logical Equivalence) - தனிநிலைக் கணிதம் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்