Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | கணித தர்க்கவியல் (Mathematical Logic) : மெய்மம், முரண்பாடு மற்றும் நிச்சயமின்மை (Tautology, Contradiction, and Contingency)

தனிநிலைக் கணிதம் | கணிதவியல் - கணித தர்க்கவியல் (Mathematical Logic) : மெய்மம், முரண்பாடு மற்றும் நிச்சயமின்மை (Tautology, Contradiction, and Contingency) | 12th Maths : UNIT 12 : Discrete Mathematics

   Posted On :  21.09.2022 05:02 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்

கணித தர்க்கவியல் (Mathematical Logic) : மெய்மம், முரண்பாடு மற்றும் நிச்சயமின்மை (Tautology, Contradiction, and Contingency)

ஒரு கூற்றை அதன் கூட்டுக் கூற்றுகளின் மெய் மதிப்பை பொருட்படுத்தாமல் மெய்மம் எனக் கூறவேண்டுமானால் அதன் மெய்மதிப்பு எல்லா நிலையிலும் T ஆக இருக்க வேண்டும். இதை T எனக் குறிப்பிடுவர்.

மெய்மம், முரண்பாடு மற்றும் நிச்சயமின்மை (Tautology, Contradiction, and Contingency)

வரையறை 12.16

ஒரு கூற்றை அதன் கூட்டுக் கூற்றுகளின் மெய் மதிப்பை பொருட்படுத்தாமல் மெய்மம் எனக் கூறவேண்டுமானால் அதன் மெய்மதிப்பு எல்லா நிலையிலும் T ஆக இருக்க வேண்டும். இதை T எனக் குறிப்பிடுவர்.

வரையறை 12.17

ஒரு கூற்றை அதன் கூட்டுக் கூற்றுகளின் மெய் மதிப்பைப் பொருட்படுத்தாமல் "முரண்பாடு" எனக் கூற வேண்டுமானால் அதன் மெய்மதிப்பு எப்பொழுதும் F ஆக இருக்கவேண்டும். இதை IF எனக் குறிப்பிடுவர்

வரையறை 12.18

ஒரு கூற்று மெய்மமுயும் அல்ல மற்றும் முரண்பாடும் அல்ல எனில், அதற்கு "நிச்சயமின்மை " என்று பெயர்.


உற்று நோக்கி அறிந்தவை 

1. ஒரு மெய்மத்துக்குரிய மெய்மை அட்டவணையில் கூற்றுக் கோவைக்குரிய நிரலில் உள்ளஉறுப்புகள் அனைத்தும் T ஆக இருக்கும்

2. ஒரு முரண்பாடுக்குரிய மெய்மை அட்டவணையில் கூற்றுக் கோவைக்குரிய நிரலில் உள்ளஉறுப்புகள் அனைத்தும் F ஆக இருக்கும்

3. ஒரு மெய்மத்தின் மறுப்பு ஒரு முரண்பாடாகும். ஒரு முரண்பாட்டின் மறுப்பு ஒரு மெய்மம்ஆகும்

4. மறுப்புடன் கூடிய ஒரு கூற்றின் பிரிப்பிணைவு ஒரு மெய்மம் ஆகும். மறுப்புடன் கூடிய ஒரு கூற்றின் இணையல் ஒரு முரண்பாடாகும். அதாவது p ¬p ஒரு மெய்மம் ஆகும். p ¬p ஒரு முரண்பாடாகும். இவற்றின் மெய்மை அட்டவணைகளை அமைத்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.


மெய்மத்திற்கு எடுத்துக்காட்டு


 ¬p இன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் T மட்டுமே உள்ளதால்  ¬p  ஒரு மெய்மம் ஆகும்.


முரண்பாடுக்கான எடுத்துக்காட்டு


மேற்காணும் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் F மட்டுமே உள்ளதால்p  ¬p ஒரு முரண்பாடாகும்

குறிப்பு

அட்டவணை 12.10 ல், கடைசி நிரல் முழுவதும் F ஆக இருப்பதால் ( p  q)  ( p  ¬q)  ஒரு முரண்பாடாகும்


நிச்சயமின்மைக்கு எடுத்துக்காட்டு


மேற்கண்ட மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் T மற்றும் F கலந்து வருவதால் கொடுக்கப்பட்ட கூற்றுகள் மெய்மமும் அல்ல மற்றும் முரண்பாடும் அல்ல. எனவே, இது ஒரு நிச்சயமின்மை .


Tags : Discrete Mathematics | Mathematics தனிநிலைக் கணிதம் | கணிதவியல்.
12th Maths : UNIT 12 : Discrete Mathematics : Mathematical Logic: Tautology, Contradiction, and Contingency Discrete Mathematics | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம் : கணித தர்க்கவியல் (Mathematical Logic) : மெய்மம், முரண்பாடு மற்றும் நிச்சயமின்மை (Tautology, Contradiction, and Contingency) - தனிநிலைக் கணிதம் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்