Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி | 9th Social Science : History: The Age of Revolutions

   Posted On :  06.09.2023 07:02 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

VI. விரிவான விடையளிக்கவும்

1. 'பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை' இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

விடை:  

ஏழாண்டுப் போரினால் இங்கிலாந்து பெருமளவு பணம் செலவு செய்ய நேர்ந்தது. செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இங்கிலாந்து விரும்பியது.

எனவே குடியேற்ற நாடுகள் மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.

• 1764 ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டத்தினை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை " எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.

தங்களின் கருத்துக்களைக் கேட்காமல் உருவாக்கப்படும் கொள்கைகளுக்கு வரி கட்டமுடியாது என்ற வாதத்தைக் குடியேற்ற மக்கள் எழுப்பினர்.

பல்வேறு புதிய சட்டங்கள் மூலம் பல புதிய வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

தங்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கில நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

• "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பில்லை " என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது. இதுவே அமெரிக்க சுதந்திரப் போருக்கு முக்கியக் காரணமாயிற்று.

 

2. 1789ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.

விடை:

பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டில் பல தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

வால்டேர் : வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார். வால்டேரின் புகழ் பெற்ற நூல் 'கான்டீட்' என்பதாகும்.

ரூசோ : இவருடைய அரசியல் கருத்துக்கள் பலரது மனங்களைக் கவர்ந்து புதிய முடிவுகளை எடுக்கச் செய்தன. பிரெஞ்சுப் புரட்சியில் இவரது சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின. 'சமூக ஒப்பந்தம் என்ற நூலில் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாண்டெஸ்கியூ : இவர் 'சட்டத்தின் சாரம்', 'பாரசீக மடல்கள்' என்னும் நூல்களை எழுதினார். சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதிகாரப் பிரிவினை என்னும் கோட்பாட்டை முன் வைத்தார். எந்த ஓர் அரசியலில் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அங்குதான் தனிமனிதனின் சுதந்திரம் சிறப்பாகப் பாதுகாக்கும் என்று எடுத்துரைத்தார்.

 

வரலாற்றுடன் வலம் வருக

மாணவர் செயல்பாடுகள்

1. பதினாறாம் லூயியின் அரசாங்கத்தைப் போன்று எந்த ஓர் அரசாங்கமும் திவாலாகி விட்டால் அந்த நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்?

2. அமெரிக்கச் சுதந்திரப் போர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கம் ஆகியவற்றை ஒப்பிடுக.

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

 1. பாஸ்டில் சிறைச் சாலை நிகழ்வை பற்றி விவரி.

2. 'லே மிசரபில்' என்ற விக்டர் ஹியூகோவின் வரலாற்று நாவலின் சாராம்சத்தை வாசிக்கவும்.

 

மேற்கோள் நூல்கள்

 1. George Brown Tindall and David E. Shi, America: A Narrative History, Vol. 1,

W.W. Norton, New York, 1993.

2. John A. Garraty, A Short History of the American Nation, Harper Collins College

Publishers, New York, 1993.

3. James A. Henrietta, et al., America's History, Vol. 1, Worth Publishers, New York, 1997.

4. Jawaharlal Nehru, Glimpses of World History, Penguin, 2004.

5. Chris Harman, The People's History of the World, Orient Longman, 2007.

6. Eric Hobsbawm, The Age of Revolution, 1789-1848, Vintage Books, New York, 1996.

7. Edward MacNall Burns, World Civilizations, Vol. II, W.W. Norton, 1968.

8. David Thomson, Europe Since Napoleon, Penguin Books, New Delhi, 1990.

 9. C.D.M. Ketelbey, A History of Modern Times since 1789, OUP, New Delhi, 1997.

 

இணையச்செயல்பாடு

புரட்சிகளின் காலம்

இந்த செயல்பாட்டைச் செய்வதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரைபடத்தில் அமெரிக்க மாகாணங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்


படிநிலைகள்

 படி-1 URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க.

படி-2 விளையாட்டுப் பக்கத்திற்குச் செல்ல விளையாட்டு ஐகானைக் கிளிக் செய்க.

படி-3 Places of states என்பதைத் தெரிவு செய்யவும்.

படி-4 வரைபடத்தில் சிதறிக்கிடக்கும் மாகாணங்களைச் சரியான இடத்தில் இழுத்துப் பொருத்தவும்.


உரலி: https://bensguide.gpo.gov/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டும்.

Tags : The Age of Revolutions | History | Social Science புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Age of Revolutions : Answer in detail The Age of Revolutions | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி - புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்