Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals

10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

நினைவில் கொள்க

ஹைட்ரா போன்ற உயிரிகள் இழப்பு மீட்டல் முறையில் துண்டு துண்டாக வெட்டினாலும் புதிய உயிரிகளை உருவாக்கும். அவை மொட்டுக்களை உருவாக்கி அதன் மூலமும் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன.

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் (அறிவியல்)

நினைவில் கொள்க

பாக்டீரியாக்கள் மற்றும் புரோட்டோசோவன்கள் பிளத்தல் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேய் செல்களை உருவாக்குகிறது.

ஹைட்ரா போன்ற உயிரிகள் இழப்பு மீட்டல் முறையில் துண்டு துண்டாக வெட்டினாலும் புதிய உயிரிகளை உருவாக்கும். அவை மொட்டுக்களை உருவாக்கி அதன் மூலமும் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன.

தாவரங்களில் நடைபெறும் பாலினப் பெருக்கத்தின் முதல் படிநிலையான மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்தத்தூளானது மகரந்தப்பையிலிருந்து சூல்முடியைச் சென்றடைவதாகும். இதனைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெறுகிறது.

பால் இனப்பெருக்கம் என்பது இரண்டு ஒற்றைமய இனச்செல்கள் ஒன்றிணைந்து ஒரு இரட்டைமய உயிரினத்தை (கருவுற்ற முட்டை - சைகோட்) உருவாக்குவது.

ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் உருவாகும் நிகழ்வு இனச்செல் உருவாக்கம் என்றழைக்கப்படுகிறது. இது விந்தணுவாக்கம் மற்றும் அண்டவணுவாக்கத்தை உள்ளடக்கியது.

பெண்களின் வாழ்வில், இனப்பெருக்க காலத்தில் நிகழும் சுழற்சி முறையிலான கால ஒழுங்கு மாற்றமே மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

பிளாஸ்டோசிஸ்ட் கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதித்து வைக்கப்படும் நிகழ்வு பதித்தல் எனப்படும்.

தாய் சேய் இணைப்புத் திசுவானது வளரும் கருவிற்கும், தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்துகிறது.

தாயின் கருப்பையிலிருந்து சேயானது வெளிவரும் நிகழ்வு குழந்தை பிறப்பு எனப்படும்.

கருத்தடை அறுவை சிகிச்சை அல்லது மலடாக்குதல் என்பது ஒரு நிலையான கருத்தடை முறையாகும். ஆண்களில் வாசெக்டமி மற்றும் பெண்களில் டியூபெக்டமி முறையில் கருத்தடை செய்யப்படுகிறது. இவைகள் நிரந்தர குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளாகும்.



 

Tags : Reproduction in Plants and Animals | Science தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்.
10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals : Points to Remember Reproduction in Plants and Animals | Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் : நினைவில் கொள்க - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்